இவற்றிற்கான களஞ்சியம் 'Thamizh' வகை

Feb 16 2007


“ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?

ஒரு மரவெட்டி கிளையில் இருந்துகொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.

உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் போகிறேன் என்றாராம்.

இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லோ கூப்பிட்டான். அதனால், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

இப்படித் தான் “ஐயோ” என்று சொல்லக்கூடாது என்பதற்காக எனக்கு அம்மா சொன்ன கதை.

______
CAPitalZ

3 responses so far

Feb 13 2007


தமிழில் நீங்கள் பேச கணினி தட்டச்சுவது சாத்தியமே!

இந்த இடுகையானது மயூரன் அவர்களின் சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா? என்னும் இடுகைக்கான எனது பதில் இடுகை.

நீங்கள் சொல்வதை ஓரளவிற்கு ஏற்றாலும், சொல்திருத்தியால் பல நன்மைகளும் கொண்டுவரலாம்.

“வாலைப்பலம்” என்பதை சொல்திரித்தியால் பிழை கண்டுகொள்ளலாம்.
இந்த சொல்லுக்குப் பின்னால் ஈழத்தமிழன் கலவரவும் இருக்குதையா…! இதை ஒருவரிடன் சொல்லச் சொன்னால், அவன் சரியாகச் சொல்லவில்லை என்றால் [சரியானது: “வாழைப்பழம்”, எழுத்து அல்ல உச்சரிப்பே கவனிக்கப்பட்டது] , அவன் சிங்களவன் என்று இனங்கண்டு கொண்டார்கள். இப்படி சிங்களவனும் சில சொற்கள் வைத்திருந்தான். சொல்லவில்லை என்றால் வெட்டு/ எரி.

சரி, இப்படிப் பல சொற்களைக் திருத்திக்கொள்ளலாம் தானே?

இதைவிட தமிழ் இலக்கண விதிகளை தொல்காப்பியமும் அதற்குப் பின் வந்த நன்னூல் போன்ற பிற இலக்கண நூல்களும் வரையறுக்கின்றன. அந்த விதிகளைக் கொண்டும் பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். உ+ம்: மெய்யெழுத்தில் எந்தச் சொல்லும் தொடங்காது. இப்படிப் பல இருக்கு. “அன்த” என்று எழுதாமல் “அந்த‌” திருத்தவும் உதவும். மெய்யெழுத்தின் பின் ஒரு உயிர் எழுத்து வராது: “அக்க்அரை” என்று எழுதாமல் “அக்கரை” என்று காட்டும்.

ஆங்கிலத்தில் இப்படி எல்லாம் விதிகள் இல்லை. ஆங்கில இலக்கண விதிகளுக்கே பல விதிவிலக்குகள் இருக்கின்றன. பிரஞ்சுக்கு இதைவிட அதிகம். தமிழ் மிகவும் கட்டுக்கோப்பான மொழி. அங்கில மென்பொருள் ஒன்று உள்ளது. நீங்கள் ஒலிவாங்கியில் சாதாரணமாகக் கதைப்பது போல் கதைக்க கணினியில் உங்கள் வசனங்களை அது தானாகவே கண்டுபிடித்து தட்டச்சும். இப்பட்டிப்பட்ட மேம்பட்ட செயற்பாடு ஆங்கிலம் போன்ற மொழிக்கே இருக்கிறதென்றால், தமிழுக்கு நிச்சயமாகச் செய்யலாம். இந்த அங்கில மென்பொருள் எந்தக் காலமோ வந்தாலும் அது பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை. காரணம் எல்லா நேரமும் சரியாக நீங்கள் சொல்வது வராது. இதற்கு ஆங்கில மொழியின் இலக்கண விதிகளே காரணம். தமிழுக்குச் செய்தால், மிகத் துல்லியமாகச் செய்யலாம். ஏனெனில், தமிழில் ஒரு சொல்லை ஒரு விதமாகத் தான் உச்சரிக்கலாம். ஆங்கிலத்தில் அப்படி அல்ல. உ+ம்: லைவ் = live = நேரடி ஒலிபரப்பு, லிவ் = live = வாழ்; இப்போ இதைச் சொல்லிப்பாருங்கள்: live your life!

இங்கே இந்த ஒளிநாடாவைப் பாருங்கள். வேடிக்கை புரியும். இது மைக்றோசொவ்டின் புதிய இயங்குதளமான விஸ்டா அறிமுகப்படுத்தியபோது அரங்கில் நடந்தது.
[kml_flashembed movie="http://www.youtube.com/v/kX8oYoYy2Gc" width="425" height="350" wmode="transparent" /]
அவர் ஏதோ சொல்ல கணினி தன்னிச்சையாக வேறு ஏதொ அடிக்கிறது.

அப்ப ஏன் இன்னும் தமிழுக்கு இப்படிச் செய்யவில்லை?
இதை ஆராய்ச்சி செய்து உருவாக்குவதற்கு பண உதவி வேண்டும். அது தமிழ் அரசிடமிருந்து கிடைப்பதில்லை. இப்போது நடக்கும் ஆராய்ச்சிகள் கூட [முரசு, INFITT/ உத்தமம்] தனியார்/ ஆர்வலர்கள்/ குழும‌ நிறுவனங்கள் தங்கள் பணத்தை போட்டுத் தான் செய்கின்றன. தமிழ் அரசு ஒருங்குறி ஒன்றியத்தில் அங்கத்தவராகக் கூட இருக்கவில்லை, தமிழை ஒருங்குறியில் ஏற்றும்போது! இவர்களும் முயற்சிக்கிறார்கள் Developing Intelligent Indic Applications.

அப்படிப் பெருந்த்தொகைப் பணத்தைப் போட்டுச் செய்தால் யார் அதை வாங்குவார்கள்?
தமிழுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆங்கிலத்திலத்திலேயே எல்லாம் செய்ய அரசு அனுமதிப்பதால்், ஏன் தமிழுக்கு என்று பணம் செலவு செய்து அதை வாங்க வேண்டும் என்று யோசிக்கிறார்கள். அரசு தமிழை அமுல்படுத்தினால், நிறுவனங்கள் வாங்க முன்வரும். நிறுவனங்கள் வாங்க முன்வந்தால், ஆராய்ச்சியாளர்கள் போட்டிபோட்டு மிகவும் மேம்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட தமிழ்த் திருத்தியை உருவாக்குவார்கள்.

பெருந்தொகைப் பணத்தைப் போட்டுச் செய்துவிட்டு அதை இலவசமாகக் கொடுக்கவும் முடியாது.

தொல்காப்பிய விளக்கங்கள்:
கடுவெளி
tamil-ulagam : Message: tholkaappiyamum kuRiyeeRRangkaLum – 2
tamil-ulagam : Message: tholkaappiyamum kuRiyeeRRangkaLum – 3
tamil-ulagam : Message: tholkaappiumum kuRiyeeRRangkaLum – 4

6 responses so far

Nov 07 2006


WordPress செய‌லியை ஏற்க‌னே நிறுவி ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள்

Filed under Tamils,Thamizh,WordPress

அன்பான வ‌லைப்ப‌திவு ந‌ட‌த்துன‌ர்க‌ளே,

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌, பொழுதுபோக்கு, ம‌ற்றும் பார‌ம்ப‌ரிய‌ அம்ச‌ங்க‌ளை வெளிக்காட்டும் வித‌மாக‌ WordPress Theme அமைத்துத் த‌ரும்ப‌டி வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் …

No responses yet

Oct 26 2006


உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவை!

Filed under Internet,Thamizh,WordPress

அன்பான வலைப்பதிவாளர்களே. உங்கள் எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் _/|\_

என்னடா இவன் இப்படி தொடங்குறானே என்று பார்க்கிறீர்களா? உங்க உதவி வேணும் அது தான். அட அது ஒண்ணுமில்லீங்க. தமிழ் வலைய வரலாற்றில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.

உங்களுக்கு ஞாபகம் இருக்கா தெரியவில்லை. சில தினங்களுக்கு முன் நான் ஒரு நல்ல இணையத்தள முகவரி தெரிவுசெய்து தரச்சொல்லிக் கேட்டிருந்தென் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன].

அப்படி நான் கேட்டு விட்டதிற்கு விழியன் ஒரு பரிந்துரை செய்திருந்தார் [ நன்றி விழியன்] “அடடா”. அடக் க்டவுளே நான் எத்தனையோ இணையத் தள முகவரி தேடிப்பார்த்து விட்டேன். ஒன்றுமே கிடைக்கலைங்க. நிசமாலுமே என்ற இடுகையைப் பார்த்தா உங்களுக்கே தெரியும் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன].

அவர் சொன்ன adada.com உம் இல்லை. ஆனா adadaa.com இருந்திச்சு.

மூன்றெழுத்தா இருந்திச்சா, அடடா. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் …” என்று நானும் பாடலாமே என்று அதையே பதிவு செய்துவிட்டேன். அதாவது http://adadaa.com/

இப்ப அந்தத் தளத்தில் பெரிசா ஒண்ணும் இல்லீங்க. அது தொடங்கியே ஒரு கிழமை தான் வரும். ஆனா என்ன சிறப்பம்சம் என்றால், இது தான் உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையாக இருக்கும். அதாவது, WordPress.com, BlogSpot.com போன்று தமிழர்களால் தமிழர்களுக்காக நடத்தப்படும் சேவையாக இருக்கும் [என்னடா சனநாயகத்திற்கு இலக்கணம் கொடுப்பது போல் கொடுக்கிறானே என்று யோசிக்கிறியளா?].

சரி சரி நீங்க என்ன யோசிக்கிறீங்க என்று தெரியுது. இதை விட நாங்க WordPress.com ஓ (அ) BlogSpot.com இலோ புது பதிவை திறந்திடுவோமே என்று. BlogSpot.com பல பிரச்சினைகளைக் கொடுக்குது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். WordPress பிளாக்கரை முந்தி விடுமோ என்று கூட இடுகைகள் வரத்தொடங்கி விட்டது. இன்றைக்கும் பிளாக்கர் வேலையே செய்யாமல் கிடந்தது. அதைவிட நீங்கள் பதிந்ததை வெளியுலகிற்கு காட்ட ஒவ்வொரு முறையும் மீள் பிரசுரிக்க [Republish] வேண்டியிருக்கு.

சரி இதுல முக்கியமான point என்னெண்டா, அடடா“வில் நிறுவி உள்ள‌ வலைப்பதிவு சேவைச் செயலி WordPress.com செயலியே தான்!

அட ஆமாங்க. WordPress.com என்பது ஒரு திறந்த மூலச் செயலி [Open source code]. ஆகவே வேர்ட்பிரஸ்.காம் இற்கும் “அடடா” விற்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது. [ஐஐயோ சின்ன சின்ன வித்தியாசம் இருக்குங்க. அதை அப்புறமா விபரமா விளக்குறன்.]

சரி ஆனா இப்ப அடடா.காம் ஒரு அல்ஃபா [alpha] நிலையில் தான் இருக்கு. அதாவது ஒருவரும் புதிதாக வலைப்பதிவு அடடா.காம் இல் தொடங்க இயலாது. அப்ப பிறகென்னதிற்கு இந்த பில்டப்பு என்று கேட்கிறியளா? அடடா.. அதுக்குத்தானே சுத்தி சுத்தி வாரன்.

  • இந்த அடடா வலைப்பதிவு சேவையை முழுமையாக தமிழாக்கம் செய்ய வேண்டும்.
  • தமிழ் “தீம்” [theme] கள் தயாரிக்க வேண்டும்.
  • தமிழ்மணம் பதிவு பட்டையை இயங்க வைக்க வேண்டும்.
  • தமிழ் எழுத்துக்களுக்கு என்று சிறப்பான சில சேவைகளை வலைப்பதிவு இடத்திலேயே வழங்க வேண்டும்.

இப்படி கனக்க இருக்குங்க. அதுக்கு உங்கட உதவி தேவை. உங்களுக்கு இதில் விருப்பம் இருந்தால் இங்கே பின்னூட்டமாக இடவும் (அ) எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். அட மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் அதன் கட்டத்திற்குள் போடவும்.

உங்களுக்கு JavaScript, PHP, MySQL என்று எதாவது சாடையான் அறிவு இருந்தால் போதும். அட அப்படி இல்லைனா கூட உங்களுக்கு உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையை உருவாக்க ஆர்வம் இருந்தா காணுமே. தமிழாக்கத்திலும், சோதனை செய்வதிலும் பங்கெடுக்கலாமே.

அட நான் ஏதும் பண‌ம் பண்ண யோசிக்கிறன் என்று யோசிக்கிறியளோ.

வேர்ட்பிரச், பிளாகர் என்று எல்லாமே இலவசமாக கொடுக்க நான் காசுக்கெண்டு சொன்னா யாராச்சும் வருவாங்களா? இல்லையே. அடடா.காம் கூட இலவசம் தானுங்க. வேர்ட்பிரசில் இல்லாத தீம் எடிட்டிங் [theme editing] அடடாவில் கொடுக்கலாம் என்று இருக்கிறன். அதற்கு தான் சில சோதனைகள் செய்துகிட்டு இருக்கிறன். மேலும் அதிகமான் தீம்கள் [themes]. ஒவ்வொரு வலைப்பதிவாளரும் தத்தம் குறுஞ்செயலிகளை [plug-ins] தாங்களே நிர்வாகிக்கக்கூடியதாக [plug-in manageability] அமைக்கலாம் என்றும் இருக்கிறேன். இன்னும் கனக்க இருக்குங்க. எல்லாம் சோதனை செய்துகிட்டு இருக்கிறேன்.
அதற்கு உங்கட உதவியும் தேவை. அதற்கு தான் இந்த இடுகை. உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன் ‍‍ 2!

அட முக்கியமான் விடயத்தைச் சொல்லவே இல்லை. இன்றிலிருந்து 30 நாட்களில் அடடா.காம் வை இணையத்தில் வெளியிடலாம் என்று இருக்கிறேன். அதாவது, 30 நாட்களுக்குள் சோதனை எல்லாம் முடிந்து எவரும் ஒரு வலைப்பதிவை தொடங்க அனுமதிக்கலாம் என்று திட்டம். அட நேரம் போறதே தெரியலை. வாங்க எல்லோரும் சேர்ந்து உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையைக் கட்டி எழுப்பலாம்!.
_____
CAPital

பி.கு.: எனது “ஒரு படம்” வலைப்பதிவைத் தான் அடடா வில் சோதனை செய்து வருகிறேன்.

7 responses so far

Sep 28 2006


உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன்

Filed under Internet,Thamizh

ஒரு நல்ல கருத்துடைய இணைய தள முகவரி ஒன்று கூருங்களேன். நான் புதிதாக ஒரு இணையத்தளம் பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன்.

எனது எல்லா பதிவுகளையும் ஒரு முகவரிக்குக் கீழ் கொண்டுவர உத்தேசம். அதாவது

http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1paththiram.wordpress.com/
http://1about.wordpress.com/
http://1seythi.wordpress.com/
http://1letter.wordpress.com/
http://1padam.wordpress.com/

இதில் “wordpress” என்னும் சொல்லுக்குப் பதிலாக தான் எனக்கு சொல் தேவை. கட்டாயம் மொழி பெயர்ப்பாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
எதாவது ஒரு தமிழ் சொல்லாக, சிறிய சொல்லாக, நல்ல பரந்த கருந்துடைய சொல்லாக இருந்தால் நலம்.

எனக்குத் தோன்றியவை, ஆனால் எனதாக்க முடியாதவை.
aalam.com – ஆல மரம்
naan.com – நான்
naam.com – நாம்
viidu.com – வீடு – ஆனால், இரண்டு ‘i’ மிக நெருக்கமாக இருப்பதால், முகவரியை பிழையாக விளங்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
veeli.com – வேலி
_____
CAPital

சேர்க்கப்பட்டது I: 2006/10/12 @ 3:28 PM [GMT -5]

vaasal.com
vaasam.com
vaanam.com
vanam.com
naadu.com
auvai.com – ஔவை
manam.com
seeval.com – சேவல்
kanavu .com – கனவு
kural.com – குரல்
muram.com – முறம்
murram.com – முற்றம்
vanakkam.com
naathan.com
nathan.com
muham.com
mukam.com
ammaa.com
amma.com
sirahu.com
siraku.com
tamils.com
aham.com – அக‌ம்
puram.com – புறம்
suvadi.com – சுவடி
suvadu.com – சுவடு
theesam.com – தேசம்
tiger.com
tigers.com
dadi.com – டா, டி [அப்பா அல்ல]
koolam.com
sooru.com – சோறு
yaroo.com – யாரோ
idam.com – இடம்
nanri.com – நன்றி
santhi.com
santhy.com
valai.com – வலை
valaivaasal.com – வலைவாசல்
kudil.com
karuththu.com – கருத்து
thodarpu.com – தொடர்பு
valai.com   –   வலை
valy.com   –   வலை
vali.com   –   வலை

சும்மா ஒரு வீம்புக்கு இதை முயற்சிசெய்து பார்த்தேன்.
ltte.com
tamileelam.com
அட அந்த இணைய முகவரியை பதிவு செய்யவே இயலாதாம்!

12 responses so far

பழைய இடுகைகள் »

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.