இவற்றிற்கான களஞ்சியம் 'Tamil Nadu' வகை

Nov 14 2008


[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 2] இந்தியா போகும்போது எடுத்துச்செல்ல‌ வேண்டிய‌வை

Filed under India,Tamil Nadu

ஒரு வ‌ழியாக‌ இந்திய‌ விசா திக்கித் திண‌றி க‌டைசி நேர‌த்தில் எடுத்தாச்சு.

இந்தியா முத‌ல் முறை செல்கிறேனே, அங்கு ஏதாவ‌து வ‌ருத்த‌ங்க‌ள் வ‌ந்துவிட்டால். உட‌னே வைத்திய‌ரிட‌ன் போனேன். டெங்கு காச்ச‌லுக்கு ஊசி நான் வேண்டிக் கொடுக்க‌ ம‌ருத்துவ‌ர் அடித்தார். Tetnus shot உம் அடித்தார். இது 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு தாக்குப் பிடிக்குமாம். பிற‌கு Travel Clinic இற்குப் போகும்ப‌டி சொன்னார். ச‌ரி முத‌ன் முத‌லில் போகிறேனே அதையும் செய்வ‌மே. அவ‌ருக்கு fees $85. அவ‌ர் சொன்ன‌து இவை தான். த‌ண்ணீர் போத்த‌லை வாங்கிக் குடி. ந‌ன்றாக‌க் காய்ச்சாத‌ எதையும் சாப்பிடாதே. அப்ப‌வே யோசித்தேன், அப்ப‌டியாயின் “கையேந்தி ப‌வ‌னில்” சாப்பிட‌லாம். அது ந‌ல்லா ச‌மைச்ச‌து தானே. shell foods எதையும் சாப்பிடாதே. அதாங்க‌, ந‌ண்டு, றால், ம‌ட்டி இப்ப‌டி. என‌க்கு தொபக்கடீர் எண்டுச்சு. அட‌ இத‌ல்லாம் சாப்பிட‌க்கூடாதா. ஆ, டாக்ட‌ர் கிட‌ந்தார், ம‌ன‌துக்குள் யோசிச்சுக் கொண்டேன். க‌ன‌டாவில் ந‌ல்ல‌ உண‌வின்றி நா வ‌ற‌ண்டு போய்க் கிட‌க்குது. த‌மிழ் நாடு போய் எங்க‌ள் ஊரில் போல் எல்லாம் இருக்கும் அதை ஒரு வ‌ழி பாக்காவிட்டால் பிற‌கேன் த‌மிழ் நாடு போய்?

அவ‌ர் சொன்ன‌ ஒரே ந‌ல்ல‌ விச‌ய‌ம், அந்த‌ நுள‌ம்பு வ‌லை வேண்டிக் கொண்டு போக‌ச் சொன்ன‌து. இதை விட‌, நுள‌ம்புக்கு தோலில் அடிக்க‌, துணிக்கு அடிக்க‌, வ‌யிற்றுப் போக்கிற்கு என்று வித‌ம் வித‌மா என்கிட்ட‌ spray/ குழுசை எல்லாம் வித்தார‌ப்பா. ம‌லேரியா காச்ச‌லுக்கு என்று குழுசையும் வாங்க‌ச் சொல்லி அதுவும் ஒரு $100 மேல் வாங்கிப் போன‌னான்.

இந்தியா போகிற‌வ‌ங்க‌, நுள‌ம்பு வ‌லையைத் த‌விர‌ வேறு ஏதையும் வாங்கிக்காதீர்க‌ள். ஓ, ம‌ற்ற‌து வ‌யிற்றுப் போக்கிற்காக‌ Gastric trouble இற்கு என்று ஒரு குழுசை box விற்குது [Imodium Advantage – Rapid Relief of Diarrhea]. அதை ம‌ற‌க்காம‌ல் வாங்கிப் போங்கோ.  இந்தியாவில், வெகு தூர‌ம் ப‌ய‌ணிக்க‌ வேண்டி வ‌ந்தால், இந்த‌க் குழுசை ஒன்றை காலையிலேயே போட்டுவிட்டால், அன்று பூராவும் ம‌ல‌ம் க‌ழிக்க‌ வேண்டி வ‌ராது. இதைத் தான் நாங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தினோம். இந்தியாவில் உங்க‌ள் வீட்டையும், விலை அதிக‌மான‌ Hotel ஐயும் த‌விர‌ வேறு எங்கும் ம‌ல‌ ச‌ல‌ம் க‌ழிக்க‌ ஆண்க‌ளுக்கே கொஞ்ச‌ம் அருவ‌ருப்பாக‌த் தான் இருக்கும். பெண்க‌ளுக்குச் சொல்ல‌வே தேவையில்லை. இடையில் வாக‌ன‌த்தை நிறுத்தி உண‌வு உண்ணும் Restaurant க‌ளில் ம‌ல‌ ச‌ல‌ம் க‌ழிப்ப‌து என்ப‌து மிக‌வும் அருவ‌ருப்பான‌ வேலை. Contact Lens பாவிப்ப‌வ‌ர்க‌ள், Contact Lens liquid வாங்கிக் கொண்டு போங்க‌ள்.அங்கு அதை வாங்க‌லாம். ஆனால், போய் இற‌ங்கியே க‌டைக்கு போவ‌தைத் த‌விர்க்க‌லாம் இல்லையா. இந்திய‌ காசும் கொஞ்ச‌ம் மாற்றிக் கொண்டு போங்க‌ள். போய் இற‌ங்கி, விமான‌ நில‌ய‌த்தில் மாற்றினீர்க‌ள் என்றால், மிக‌க் கூடிய‌ க‌ழிவு கொடுத்தே மாற்ற‌ வேண்டி இருக்கும். வ‌ய‌து போன‌வ‌ர்க‌ளுட‌ன் போகிறீர்க‌ள் என்றால், விமான‌ சீட்டை ப‌திவு செய்யும்போதே wheelchair assistance தேவை என்று ம‌ற‌க்காம‌ல் ப‌திவு செய்து விடுங்க‌ள். அவ‌ரைச் சாட்டி நீங்க‌ளும் எதிலும் முத‌லுரிமை எடுத்துக்கொள்ள‌லாம். மிக‌ப் பெரிய‌ வ‌ரிசைக‌ளில் எல்லாம் நீங்க‌ள் நிற்க‌த் தேவையில்லை. customs checking கூட‌ உங்க‌ளுக்கு என்று த‌னியாக‌ இருக்கும், இல‌குவாக‌க் கூட‌ இருக்கும்.

என் ம‌னைவி என்னைப் பார்த்து சிரிப்ப‌தா அழுவ‌தா என்று யோசித்தார். அவ‌ ஒரு 6 த‌ட‌வை இந்தியா போய் வ‌ந்துவிட்டார். அவ‌ ஒரு குழுசையையும் எடுத்துக்கொண்டு வ‌ர‌வில்லை. நான் கிலோ க‌ண‌க்கில் குழுசையுட‌ன்.

Jet Airways இல் இந்தியா போக‌ப் புற‌ப்ப‌ட்டோம். நெடுந்தூர‌ப் ப‌ய‌ண‌ம். இடையில் பெல்ஜிய‌த்தில் சிறிது நேர‌ம் [2 ம‌ணித்தியால‌ங்க‌ள்] நின்ற‌து. க‌ன‌ நேர‌மாக‌வே தெரிய‌வில்லை. விமான‌த்தில் உப‌ச‌ரிப்புக‌ளும் ந‌ன்றாக‌வே இருந்த‌து. Singapore Airline குப்பை என்று என‌து மாமா மாமி சொன்னார்க‌ள். அட‌ இந்தியாவிற்குப் போகும் விமான‌த்தில் இந்திய‌ர்க‌ள் குடித்துவிட்டு பெண்க‌ளுட‌ன் சேட்டையும் கிண்ட‌லுமாக‌த் தான் இருக்குமாம்.

விமான‌த்தில் ப‌ய‌ணிக்கும்போதே, நான் த‌மிழ் நாட்டு நேர‌த்தைக் க‌ண‌க்கிட்டு அங்கு எப்போது இர‌வாகுமோ, அப்போது தான் நித்திரை கொண்டேன். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எல்லோரும் க‌ன‌டா நேர‌த்திற்கு நித்திரை கொண்டிருந்த‌ வேளையிலும் நான் ப‌ட‌த்தைப் பார்த்துக்கொண்டு முட்ட முட்ட முளித்திருந்தேன்.

அடுத்து த‌மிழ் நாட்டில் த‌ரை இற‌ங்குவோமா…

2 responses so far

Nov 10 2008


[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 1]: க‌ன‌டாவில் இந்திய‌ விசா விண்ண‌ப்பிப்போர்க்காக‌

Filed under India,Tamil Nadu

இந்திய‌ இராணுவ‌த்துட‌னான‌ என‌து அனுப‌வ‌ங்க‌ள் மிக‌வும் க‌ச‌ப்பான‌வையாக‌ இருந்த‌ன‌. இத‌னாலேயே நான் இந்திய‌ அர‌சாங்க‌த்தை மிக‌வும் எதிர்ப்ப‌வ‌னாக‌ இருக்கிறேன்.

அத‌ற்காக‌ இந்தியாவே போக‌மாட்டேன் என்று பிடிவாத‌ம் பிடிக்க‌வில்லை.

என‌து திரும‌ண‌ம் நிச்ச‌யிற்க‌ப்ப‌ட்ட‌ போது, இந்தியாவிற்கு நாங்க‌ள் செல்ல‌ வேண்டும் அங்கு ஒரு reception வைக்க‌ப்ப‌டும் என்று முடிவெடுக்க‌ப்ப‌ட்ட‌து. என‌து ம‌னைவியின் அப்ப‌ப்பா, அப்ப‌ம்மா ம‌ற்றும் சித்திமார்க‌ள் த‌மிழ் நாட்டில் இருக்கிறார்க‌ள்.

என‌க்கும் மிக‌வும் குதூக‌ல‌மாக‌ இருந்த‌து. அட‌ என‌க்கும் த‌மிழ் நாடு போற‌துக்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் என்று. க‌ன‌டா வ‌ந்து கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளாக‌ நான் இந்த‌ நாட்டை விட்டு வெளியில் போக‌வில்லை. அதுவும் “த‌மிழ்” நாட்டுக்குப் போகிறேன் என்ற‌ எண்ண‌ம் என்னை பூரிக்க‌ வைத்த‌து. என் த‌மிழ் உருவான‌ இட‌த்திற்கு, தாய்த் த‌மிழ் நாட்டிற்குப் போக‌ப் போகிறேன் என்ற‌ உண‌ர்வு. ச‌ரி ச‌ரி மேல‌ சொல்லுற‌ன்.

த‌மிழ் நாட்டுக்குப் போக‌வேண்டும் என்றால் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டுமே. என்ன‌ க‌ன‌டா சிட்டிச‌ன் என்றாலும் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டுமா? ஏன்? அது தான் இந்திய‌ நாட்டின் பாலிசி. அதாவ‌து, இந்திய‌னுக்கு வேற்று நாட்டில் என்ன‌ ச‌ட்ட‌திட்ட‌மோ, அதே தான் அந்த‌ நாட்டுக்கார‌னுக்கு இந்தியாவில். இதை நான் மிக‌வும் வ‌ர‌வேற்கிறேன். இந்திய‌ன் க‌ன‌டா செல்ல‌ விசா எடுக்க‌ வேண்டும் என்ப‌தால், க‌ன‌டாக்கார‌ன் இந்தியா செல்ல‌வும் விசா எடுக்க‌ வேண்டும் என்ப‌து இந்திய‌ ஆணை.

என‌து தாயார் ஆறு மாத‌ங்க‌ளுக்கு முன் தான் த‌மிழ் நாடு சென்று திரும்பியிருந்தார். ஆனால் அவ‌ரின் விசா‌ கிட்ட‌டியில் தான் காலாவ‌தியாகி இருந்த‌தால், நானும் அம்மாமும் விசா‌ விண்ண‌ப்ப‌த்தை த‌பாலில் அனுப்பினோம். இது தான் க‌ன‌டாவில் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டும் என்றால் செய்ய‌வேண்டிய‌து. உங்க‌ள் க‌ட‌வுச் சீட்டு, விண்ண‌ப்ப‌ப் ப‌டிவ‌ம், இல‌ங்கையில் பிற‌ந்த‌வ‌ர் என்ப‌தால் மேலுமொரு விண்ண‌ப்ப‌ப் ப‌டிவ‌ம், க‌ட்ட‌ண‌ம் [ஒவ்வொருவ‌ருக்கும் த‌னித் த‌னியாக‌], Self addressed prepaid envelope [விசா குத்தி எங்க‌ள் க‌ட‌வுச் சீட்டை மீண்டும் எங்க‌ளுக்கே அனுப்புவ‌த‌ற்கு], எல்லாம் வைத்து அனுப்ப‌ வேண்டும். அவ‌ர்க‌ள் 4 வார‌ கால‌த்திற்குள் விசா குடுத்து (அ) நிராக‌ரித்து அனுப்பி வைப்பார்க‌ள்.

ச‌ரி, நானும் அம்மாவும் அனுப்பி சில‌ கிழ‌மைக‌ளில் என‌க்கு விசா குத்தி வ‌ந்துவிட்ட‌து. ஆனால், அம்மாவிற்கு வ‌ர‌வில்லை. ச‌ரி வ‌ர‌ட்டும் என்று காத்திருந்து 6 கிழ‌மைக‌ளும் தாண்டிவிட்ட‌து. என‌க்கு திரும‌ண‌மும் ஆகிவிட்ட‌து, வ‌ருகிற‌ ச‌னிக்கிழ‌மை ப‌ய‌ண‌ம் இன்னும் விசா வ‌ர‌வில்லை. தொலை பேசியில் அழைத்துப் பார்த்தோம். அவ‌ர்க‌ள் எதையும் தொலைபேசியில் சொல்ல‌ மாட்டோம், நேர‌டியாக‌ வ‌ர‌ச்சொன்னார்க‌ள். திங்க‌ட் கிழ‌மை காலையிலேயே சென்றோம்.

அட‌ங்க் கொய்யாலே, அங்கே ஒரு 150 பேருக்கு மேற்ப‌ட்ட‌ ச‌ன‌ம். அந்த‌ விறாந்தையில் 150 மேல் அனும‌திக‌க் கூடாது என்று ப‌ல‌கை வேறு போட‌ப்ப‌ட்டு இருந்த‌து. ச‌ரி என்று வ‌ரிசையில் இருந்து முன்னுக்கு க‌வுண்ட‌ரில் இருந்த‌வ‌ரிட‌ம் எங்க‌ள் பிர‌ச்சினையைச் சொன்னோம். கேட்டார், 4 கிழ‌மை ஆகிவிட்ட‌தா என்று. நானும் சொன்னேன் 6 கிழ‌மையே தாண்டிவிட்ட‌து என்றேன். எங்கே பிற‌ந்த‌வ‌ர் என்று கேட்டார். நானும் மலேசியாவில் என்றேன். என் அம்மா மலேசியாவில் தான் பிறந்தவர். இந்தியாவில் reception வைக்க‌ இருக்கிறோம் என்று வேறு சொன்னோம். ச‌ரி என்று என‌து அம்மாவின் பெய‌ரை ஒரு சிறு துண்டு க‌ட‌தாசியில் எழுதினார். இல்லைங்க‌, என‌க்கு மாத்திர‌ம் இல்ல‌, அங்க‌ வ‌ந்த‌ எல்லாருக்கும் இதே க‌தி தான்.

பெய‌ர் கூப்பிடும் வ‌ரை க‌திரையில் உட்கார்ந்திருந்தோம். கொஞ்ச‌ நேர‌த்தில் கூப்பிட்டார். அட‌ வேக‌மாக‌ போகுதே என்று ச‌ந்தோச‌த்தில் நானும், வேறு கொஞ்ச‌ப் பேரும் அவ‌ர் பின் போனோம். உள்ளே ஒரு அறையில் வேறு ஒரு “ஆபீச‌ரு” இருந்தாரு. அங்கே நாங்க‌ள் மீண்டும் வ‌ரிசையில் உட்கார்ந்தோம். அதிலும் வேக‌மாக‌ பார்த்து அனுப்பிக்கொண்டிருந்தார். நாங்க‌ளும் எங்க‌ள் பிர‌ச்சினையைச் சொன்னோம். நான் சொன்னேன், என‌து தாயாருக்கு 65 வ‌ய‌துக்கு மேல் தாண்டிவிட்ட‌து, ம‌ற்றும் அவ‌ர் ஏற்க‌ன‌வே இப்போ போன‌ வ‌ருட‌ம் தான் இந்தியா சென்று திரும்பியிருந்தார். அவ‌ருக்கு ஏன் இவ்வ‌ள‌வு தாம‌திக்குது என்று தெரிய‌வில்லை. இவ‌ரிட‌மும் சொன்னேன், என‌து தாயார் ம‌லேசியாவில் பிற‌ந்த‌வ‌ர் என்று. இந்தியாவில் reception வைக்க‌ இருக்கிறோம் என்று வேறு சொன்னோம். அவ‌ரும் ஒரு சிறு துண்டில் பெய‌ரை எழுதி விட்டு வெளியில் காத்திருக்க‌ச் சொன்னார்.

அம்மா தீவிர‌வாதி என்று நினைக்க‌ அவ‌ருக்கு வ‌ய‌தும் இல்லை, இல‌ங்கையில் பிற‌க்க‌வும் இல்லை. என்னை நினைத்திருந்தாலாவ‌து ந‌ம்பும்ப‌டியாக‌ இருந்திருக்கும். ஒரே envelope இல் என‌தையும், அம்மாவையும் அனுப்பிய‌ ப‌டியால், ஏன் ஒருவ‌ருக்கு விசா கொடுத்து ம‌ற்ற‌வ‌ருக்கு த‌ர‌ ம‌றுக்கிறார்க‌ள் என்று என‌க்குள் குழ‌ப்ப‌ம்.

வெளியில் மீண்டும் வ‌ந்து காத்திருப்பு. அதில் அருகிலிருந்த‌வ‌ர்க‌ளுட‌ன் உரையாடினேன். அவ‌ர்க‌ள் க‌தையும் சோக‌க் க‌தையாக‌வே இருந்த‌து. நாங்க‌ள் இல‌ங்கைக் கார‌ங்க‌ள் என்ப‌தால் அல்ல‌, இந்திய‌ர்க‌ளுக்குக் கூட‌ இதே நில‌மை தான் என்ப‌தில் என‌க்குள் ஏதோ ஒரு ச‌ந்தோச‌ம். அப்ப‌டியோ, “நான் த‌னியாள் இல்ல‌”.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவ‌த‌ற்கு முன் பிற‌ந்த‌ ஒருவ‌ர் இந்திய‌ சிட்டிச‌ன் எடுப்ப‌த‌ற்காக‌ க‌ட‌ந்த‌ 5 மாத‌ங்க‌ளாக‌ அலைகிறாராம். ஒவ்வொரு முறையும் ஏதாவு இல்லை அதைக் கொண்டுவா இதைக் கொண்டுவா என்று திருப்பி விடுவார்க‌ளாம். தான் கேட்ட‌னானாம், மொத்த‌மாக‌ச் சொன்னால், தான் ஒரேய‌டியாக‌வே கொண்டுவ‌ந்து விடுவேனே என்று. அத‌ற்கு அதிகாரி சொன்னாராம், இல்லை ஒவ்வொருமுறையும் தான் சொல்லுவோம் என்று. அவ‌ர் வேறும் ஒன்று சொன்னாராம்: “So you thought it was easy to get out of India” ஹிந்தியில் சொன்னாராம். அத‌ன் அர்த்த‌ம் என்ன‌வென்றால், இந்தியாவை விட்டு வெளியேறுவ‌தே க‌டின‌ம் [exit visa என்று எல்லாம் எடுக்க‌ வேண்டும்]. ஆனால், அதை விட‌ மீண்டும் இந்தியாவிற்கு வ‌ருவ‌து மிக‌வும் க‌டின‌ம். ஓ சொல்ல‌வே ம‌ற‌ந்திட்ட‌னே, அவ‌ர் ஒரு த‌மிழ் நாட்டுக்கார‌ர். ஆனால், டெல்லியில் தான் வ‌ள‌ர்ந்த‌து. அவ‌ரால் என‌து த‌மிழை [இல‌ங்கைத் த‌மிழை] விளங்க முடிய‌வில்லை.

ச‌ரி இப்ப‌டியே நேர‌ம் போய்ச்சு. வேறு ஒரு இலங்கைத் த‌மிழ‌ர். அவ‌ர் வ‌ணிக‌ விசா [business visa] அவ‌ர் வேலை பார்க்கும் நிருவ‌ன‌த்தினூடாக‌ எடுக்க‌ அனுப்பியிருந்தாராம். அவ‌ருக்கும் ஒன்றும் வ‌ர‌வில்லை. நாங்க‌ள் காத்திருந்து காத்திருந்து, 1:30 pm ஆகிவிட்ட‌து. கொஞ்ச‌ப் பேர் தான் இருந்தார்க‌ள். ம‌திய‌ உண‌வு உண்ணும் நேர‌ம் எல்லோரும் வெளியேறுங்க‌ள் என்றார்க‌ள். அட‌ நீங்க‌ள் உள்ளே சாப்பிடுவ‌த‌ற்கு நாங்க‌ள் ஏன் வெளியேற‌ வேண்டும்? நாங்க‌ள் க‌ழ‌வெல்லாம் எடுக்க‌ மாட்டோம் என்று பேசினேன். அட‌ அது பொய்யுங்க‌. நான் பேச‌லை, அங்க‌ வ‌ந்த‌ வேற‌ ஹிந்திக் கார‌ங்க‌ள் பேசி, ஹிந்தியில‌ கூட‌ ச‌ண்டை எல்லாம் போட்டார்க‌ள். நாங்க‌ள், அமைதியாக ந‌ல்ல‌ பிள்ளை போல் இருந்தோம். நீங‌க‌ வேற‌, ஏதாவ‌து சொல்ல‌ப் போக‌, விசாவை நிராக‌ரிச்சிட்டாண்ணா?

ச‌ரி வெளியில் விட்டு க‌தைப் பூட்டி 2:00pm திற‌ப்ப‌ம் எண்டார்க‌ள். வேறு ஒருவ‌ர் 2:30 pm என்றும் என்னொருவ‌ர் 3:00 pm என்றும் சொன்னார்க‌ள். வெளியில் ப‌ல‌கையில் 3:00 pm தான் திற‌க்க‌ப் ப‌டும் என்று board இருந்த‌து. என‌க்கு ஏதோ அப்ப‌ தான் திற‌ப்பாங்க‌ எண்டு ம‌ன‌ம் சொல்லிச்சு. ச‌ரி கொஞ்ச‌ நேர‌ம் தானே எண்டு காத்திருந்தா, பெயர் கூப்பிடுறாங்க‌. எங்க‌ பெயர் இல்லை. வேறு பெயர்கள். ஆனா, ஆட்க‌ள் எல்லாம் வெளியில‌. இது என்ன‌டா கொடுமை என்றாகிய‌து. ஆட்க‌ளை வெளியேற‌ச் சொல்லிவிட்டு உள்ளுக்குள் பெய‌ர் கூப்பிடுறாங்க.

நாங்க‌ள் போய் ம‌திய‌ உண‌வு சாப்பிட்டிட்டு வ‌ந்தோம். இப்போ ச‌ன‌ம் கூடீட்டுது. பிற‌கும் உள்ளுக்குள்ள‌ திரும்ப‌ வ‌ரிசையில் நின்று திரும்ப‌ பெய‌ர் கொடுத்து, திரும்ப‌ அவ‌ர் எழுதினார் ஒரு சிறு துண்டில். என‌க்கு என்ன‌மோ முன்னுக்கு இருப்ப‌வ‌ருக்கு எங்க‌ள் விச‌ய‌ம் ப‌ற்றித் தெரியும், இருந்தும் ஒன்றும் சொல்கிறார் இல்லை என்று தோன்றிற்று.

இல‌ஞ்ச‌ம் வாங்க‌த் தான் இவ்வ‌ள‌வு இழுத்த‌டிப்போ என்று வேறு எண்ணினேன். ஆனால், இல‌ஞ்ச‌ம் குடுக்கும‌ள‌விற்கு ம‌றைவாக‌ அமைய‌வில்லை. சில‌ரை உள்ளுக்குள் வேலை செய்யும் ந‌ப‌ர் வ‌ந்து specific ஆக‌ கூப்பிட்டு எதோ க‌தைத்து அலுவ‌ல் பார்த்து விடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் அனேக‌மாக‌ “சிங்” ஆக்க‌ளாக‌ இருந்தார்க‌ள்.

இப்ப‌டி இருந்து இருந்து ஒண்டும் ந‌ட‌க்கேல்லை. அடிக்க‌டி அவ‌ரிட்டை போய் ஞாப‌க‌ப் ப‌டுத்திக்கொண்டு இருந்தோம். அந்த‌ வ‌ணிக‌ விசா கேட்டு வ‌ந்திருந்த‌வை ஒரு கிழ‌மையால் வ‌ரும்ப‌டி சொல்ல‌, அவ‌ருக்கு கோவ‌ம் வ‌ந்து, இது வ‌ணிக‌ விசா, இந்தியாவிற்கு வ‌ணிக‌ம் செய்ய‌ நான் வேலை பார்க்கும் நிறுவ‌ன‌ம் அனுப்புது, நீங‌க‌ள் விசா த‌ராவிட்டால், நிறுவ‌ன‌ம் அனுப்பாம‌ல் விட்டுவிடும் என்றார். அத‌ற்கு அவ‌ர் மிக‌வும் லாவ‌க‌மாக‌ “if you don’t go, its OK” என்றார். இப்ப‌டிச் செய்தால் இந்தியாவிற்குத் தானே ந‌ட்ட‌ம் என்று ம‌ன‌திற்குள் சிந்தித்துக்கொண்டேன். எங்க‌ள் ஆக்கினை தாங்க‌ முடியாம‌லோ என்ன‌வோ, எங்க‌ளை புத‌ன் கிழ‌மை வ‌ர‌ச்சொன்னார். நான் கேட்டேன், ச‌னிக்கிழ‌மை பிர‌யாண‌ம், க‌ட்டாய‌ம் த‌ருவீர்க‌ளா என்றேன்? அவ‌ரும் க‌ட்டாய‌ம் என‌ வாக்குறுதி கொடுத்தார்.

மீண்டும் புத‌ன் கிழ‌மை போய் மீண்டும் வ‌ரிசையில் நிண்டு அண்டைக்கு வ‌ந்த‌தை ஞாப‌க‌ப் ப‌டுத்தி, பெய‌ர் எழுதி கூப்பிடுற‌ன் என்றார். மீண்டும் காத்திருந்து, அடிக்க‌டி ஞாப‌க‌ப் ப‌டுத்தினேன். அப்போது மேல‌திகாரி ஒருவ‌ரும் வ‌ந்து பிர‌ச்சினைக‌ளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ‌ரிட‌ம் முறையிட்டேன். தாய் 65 வ‌ய‌தைத் தாண்டிவிட்டா, ம‌லேசியாவில் பிற‌ந்த‌வ‌, சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் தான் இந்தியா சென்று திரும்பின‌வ‌, reception வேறு வைத்திருக்கிறோம் என்று. இப்ப‌டிச் சொல்லிக்கொண்டிருக்கேக்கிள்ளையே, அந்த‌ முத‌லாம் ந‌ப‌ர், தான் எங்க‌ளைக் க‌வ‌னிப்ப‌தாக‌வும் அதை எடுத்துக்கொண்டுவ‌ந்து தான் கொடுப்ப‌தாக‌வும் சொன்னார்.

ச‌ரி எண்டு பார்த்தால், சில‌ நிமிட‌ங்க‌ளில் அவ‌ர் க‌ட‌வுச்சீட்டுட‌ன் வ‌ந்தார். எங்க‌ளுக்கு மிக‌வும் ஆன‌ந்த‌ம். எடுத்து முத‌லில் பார்த்த‌து, விசா குத்தியிருக்கா இல்லையா எண்டு. என்ன‌ தெரிஞ்ச‌து?

அட‌ நாங்க‌ள் விசாவிற்கு விண்ண‌ப்பித்து அனுப்பி 2ம் நாள் விசா குத்த‌ப்ப‌ட்டு இருக்கு. அட‌ங்கொயாலே, 7 கிழ‌மையாக‌ அதை வைத்திருந்து, எங்க‌ளையும் இப்ப‌டி இர‌ண்டு நாட்க‌ள் இழுத்த‌டித்து… ஏன் .. ஏன்? வெளியில் நிண்ட‌ ஒரு இந்திய‌ரிட‌ம் சொன்னேன் என் க‌தையை, அவ‌ர் இப்ப‌வாச்சும் த‌ந்தாங்க‌ளே எண்டு சந்தோச‌ப்ப‌டச்சொன்னார்.

ஆக‌வே, இந்தியா போக‌ விசா விண்ண‌ப்பிக்கும் க‌ன‌டாக் கார‌ருக்கு:
ஒரே envelope இல் எல்லாருடைய‌ விசா விண்ண‌ப்ப‌த்தை அனுப்பாதீர்க‌ள். வேறு சில‌ருக்கும் இப்ப‌டி ஒன்றாக‌ அனுப்பினால், எல்லோருக்கும் கொடுத்து அதில் ஒருவ‌ரைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறார்க‌ளாம்.
அத‌னால், த‌னித் த‌னியாக‌ ஏலுமெண்டால் ஒன்றை அனுப்பி ஒரு கிழ‌மைக்குப் பின் அடுத்த‌தை அனுப்புங்க‌ள்.

அப்பாடியோவ், ஒரு மாதிரி இந்திய‌ விசா எடுத்தாச்சு. ப‌ய‌ணிப்போமா த‌மிழ் நாட்டிற்கு

One response so far

Nov 06 2008


த‌ல‌ [அஜித்] இனி down தான்

Filed under Tamil Nadu,Tamils

என்ன‌ த‌ல‌ நான் உன் அதீத‌ ர‌சிக‌ன். என்னைக் கூட‌ ஏமாத்திட்டியே.
நீ உண்ணாவிர‌த‌த்திற்கு வ‌ர‌மாட்டாய் என்று செய்தி வாசித்த‌ பின்னும், இல்லை த‌ல‌ வ‌ரும் என்று ந‌ம்பிக்கையோடு இருந்த‌ன்.

நீ சுப்ப‌ர் ஸ்டார் ஆ வ‌ர‌வேணும், அந்த‌ தூங்கு மூஞ்சி விஜ‌ய் வ‌ர‌க்கூடாது எண்டு க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் கொண்ட‌ல்லோ இருந்த‌ன். நீ உண்ணாவிர‌த்திற்கு வ‌ர‌மாட்ட‌ன் என்று சொல்லி எங்க‌ உன் ம‌வுசு குறைஞ்சிடுமோ என்று ப‌ய‌ந்து கொண்டிருந்த‌ன். பிற‌கு வார‌ன் எண்டு அறிவிச்சா. அப்பாடியோவ், ஒரு நிம்ம‌தியா இருந்த‌து.

ச‌ரி வ‌ந்து “த‌மிழ‌ருக்கு த‌மிழீழ‌ம் கொடுப்ப‌து தான் ச‌ரியான‌ தீர்வு” எண்டு சொல்லி உல‌க‌த் த‌மிழ‌ரைக் குளிர‌வைப்பாய் எண்டு பார்த்த‌ன். உன் ப‌ட‌ங்க‌ள் உல‌க‌மெங்கும் அமோக‌மா வ‌ர‌வேற்க‌ப்ப‌ட்டிருக்கும். சும்மா ஒரு வார்த்தை தானே த‌ல‌. நீயா பிரிச்சுக் குடுக்க‌ப் போற‌? நீ கேட்காம‌லே சூப்ப‌ர் ஸ்டார் ப‌த‌வி உன்ன‌ தேடி வ‌ந்திருக்குமே. ந‌ளுவ‌ விட்டியே த‌ல‌. என‌க்கு ரொம்ப‌வுமே க‌டின‌மா இருக்கு. உன‌க்கு ஐடியா கொடுக்க‌ ஆளே இல்லையா? (அ) நீ ஒருத்த‌ரிண்டை ஐடியாவையும் கேட்கிற‌தே இல்லையா?

நான் எதிர்பார்த்தேன், ர‌ஜினி தான் கொஞ்ச‌ம் எதிர்ப்பா சொல்லுவாரு எண்டு. அட‌ அந்த‌ ஆளே த‌மிழ‌ருக்கு சார்பா பேசேக்க‌, நீ என்ன‌ த‌ல‌ ப‌ண்ணின‌?

“என் உட‌ல் ம‌ண்ணுக்கு, உயிர் த‌மிழுக்கு” என்ன‌ இது? ச‌ரி இப்ப‌டி நீ சொன்ன‌திற்கும், நீ ந‌ட‌ந்துகிட்ட‌துக்கும் ஏதாவ‌து தொட‌ர்பு இருக்கா சொல்லு? த‌மிழ‌ருக்காக‌ உண்ணாவிர‌த‌ம் இருக்கிறாங்க‌. ச‌ரி சொல்லுவாங்களே‌, இட‌ம‌றிந்து ந‌ட‌ந்துகொள்ளுத‌ல் என்று. அட‌ அப்ப‌டியாச்சும் ந‌ட‌ந்தியா. இல்லையே த‌ல‌. அடுத்த‌ வ‌ச‌ன‌மே நீ என்ன‌ சொன்ன‌ “சினிமாவ‌ சினிமாவா இருக்க‌ விடுங்க‌ please” என்று சொல்லி உரையையே முடிச்சிட்டியே. என்ன‌ ஒரு 20 நொடிக‌ள் பேசியிருப்பியா? எரியில‌ நெருப்பில‌ நெய்ய‌ இல்ல‌ ஊத்தீட்ட‌ த‌ல‌. இதுக்கு நீ வ‌ராம‌, வைத்திய‌சாலையில‌ ப‌டுத்திருக்க‌லாமே, ப‌ட‌ங்க‌ளில‌ காட்டிற‌மாதிரியே.

போ த‌ல‌, உன் ப‌த‌வி விஜ‌யிக்கு போகுது பார் உன் க‌ண்முன்னால‌யே.

இனி த‌ல‌ “குனிஞ்சிட்டுது”.

முக‌த்தில‌ ஒரு ஏதோ வேண்டா வெறுப்பா வ‌ந்த‌ மாதிரியே இருந்திச்சு. என்ன‌ ந‌டிக்கிறியா? உண்மையில‌ நீ த‌மிழீழ‌த்திற்கு எதிர் எண்டா அப்ப‌டி “த‌ல‌” ய‌ நிமிர்த்தி நான் த‌மிழீழ‌த்திற்கு எதிர்ப்பு தான், அத‌னால‌ இந்த‌ உண்ணாவிர‌த்தில‌ உட‌ன்ப‌டிக்கை இல்லை எண்டு சொல்லி இருக்க‌லாமெல்லேடா? இப்ப‌ கூட‌ ஒண்டும் கெட்டுப் போக‌ல‌, ஏதாவ‌து ஒரு ப‌ட‌த்தில‌ த‌மிழீழ‌ம் வேணும் எண்டு சொல்லு. உன் ம‌வுசு எழந்து சும்மா ஜ‌ம்முன்னு நிக்குமே. இல்லாட்டி க‌வ‌லைக்கிட‌மா தான் இருக்க‌ப் போகுது. விஜ‌ய் தான் சூப்ப‌ர் ஸ்டார்.

இதோ அஜித் “பேசிய‌” மேடைப் பேச்சு:

[kml_flashembed movie="http://www.youtube.com/v/80a0Gbbp3FY" width="425" height="350" wmode="transparent" /]

3 responses so far

Oct 27 2008


வ‌டிவேல் அர‌சிய‌லும், த‌மிழீழ‌மும்

  • த‌மிழ‌ர்க‌ளுக்குத் த‌மிழீழ‌ம் வேண்டும். இதை எதிர்ப்ப‌வ‌ர் எல்லோரும் எதிரிக‌ளாக‌த் தான் பார்க்க‌ப் ப‌டுவார்க‌ள்.
  • சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இல‌ங்கையைப் பிரிக்க‌ எத்த‌ணிக்கும் எவ‌ரும் எதிரிக‌ளாக‌ப் பார்க்கிறார்க‌ள்.
  • ஆனால் வ‌ர‌லாற்றில் இர‌ண்டும் வேறு வேறு நாடுக‌ளாக‌த் தான் இருந்த‌ன‌ என்ப‌தை சிங்க‌ள‌ அர‌சு க‌ண‌க்கிலெடுக்குதில்லை.

இத‌னால் தான் இந்திய‌ இராணுவ‌ம் இல‌ங்கை வ‌ந்த‌ போது, த‌மிழ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள், சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள். இறுதியில் எதிரியின் எதிரி ந‌ண்ப‌ன் என்ற‌ சூட்சும‌த்தைக் கையாண்டுவிட்டார்க‌ள்.

என்ன‌மோ ஏதோ, இந்தியா பொய்க் கார‌ண‌ங்க‌ளைச் சொல்லி த‌மிழீழ‌ம் அமைவ‌தைத் த‌டுப்ப‌தில் மூச்சாக‌ இருக்கிற‌து. வ‌ங்காள‌ தேச‌ம் அமைக்கும்போது இந்தியாவிலும் பிரிவினை வ‌ரும் என்று எண்ணாத‌ இந்தியா இப்போது ம‌ட்டும் ஏதோ க‌வ‌லைப்ப‌டுவ‌து போல் காட்டிக்கொள்கிற‌து. உண்மையில் அப்போது தான் இந்தியா பிரிவ‌த‌ற்கான‌ ப‌ல‌ கார‌ணிக‌ள் இருந்த‌ன‌. புதிதாக‌ உருவாகிய‌ இந்தியா, நாட்டு அர‌சிய‌ல் எப்ப‌டி இருக்கும் என்று தெரியாத‌ ப‌ல‌ தேச‌ங்க‌ள். இந்து முசுலிம் க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ கால‌ம்.
இல‌ங்கை அர‌சின் வாக்குறுதிக‌ளுக்கு ம‌ன‌ம் ஆறுதல‌டைய‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளைச் சொல்கிற‌து. 20 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ த‌மிழ‌க‌ மீனவ‌ர்க‌ளைக் கொல்ல‌மாட்டோம் என்று தான் இல‌ங்கை அர‌சு வாக்குறுதி கொடுத்துக்கொண்டு வ‌ருகிற‌து. அதை அப்ப‌டியே ந‌ம்பும்ப‌டி த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌ம் சொல்லுகிற‌து. அவ‌ர்க‌ளும் வ‌டிவேல் பாணியில் [அதாங்க‌, எவ்வ‌ள‌வு தான் அடிச்சாலும் என்ன‌ தான் ப‌ண்ணினாலும் க‌டையிசில் தான் பெரிய‌ ஆள், வெற்றி பெற்ற‌ மாதிரி ப‌ட‌ங்காட்டுற‌து] அர‌சிய‌ல் ப‌ண்ணுகிறார்க‌ள்.

த‌மிழீழ‌ம் அன்றி வேறேதும் தீர்வாகாது ஈழ‌த் த‌ம்ழ‌ருக்கு. இதை ஒத்துக்க‌ ம‌றுத்து க‌டும்போக்காக‌ வ‌ரும்போது த‌மிழ் நாட்டு ம‌க்க‌ள் கொதித்தெழுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் த‌மிழீழ‌த்திற்கு ஆத‌ர‌வு த‌ரும்போது இந்தியா ம‌றுக்க‌, இந்தியாவிலிருந்து வேறுப‌ட்டு “த‌மிழ‌ன்” என்று த‌னித்து கோரிக்கை எழுப்ப‌, இந்தியா “பாத்தீங்க‌ளா, த‌மிழீழ‌ம் கிடைச்சால் பிற‌கு இந்தியாவிலும் பிரிவினை தான் என்று நான் சொன்னேன் தானே” என்று குண்டைத் தூக்கிப் போட்டு த‌மிழீழ‌ ம‌க்க‌ள் வாயில் ம‌ண்ணைப் போடுகிற‌து. க‌டைசியில் இந்தியாவின் எண்ண‌ம் ஈடேறுகிற‌து.

த‌மிழீழ‌ ம‌க்க‌ள் கேட்ப‌தெல்லாம் ஒன்று: “உத‌வி செய்யாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை, உவ‌த்திர‌மாவ‌து செய்யாதிருங்க‌ள்”.

த‌மிழீழ‌ம் பெற்றுத்த‌ராவிட்டாலும் ப‌ர‌வாயில்லை. [த‌மிழீழ‌ம் ஈழ‌த்த‌மிழ‌னால் ம‌ட்டுமே வென்றெடுக்க‌ முடியும் என்ப‌து த‌லைவ‌ரின் ந‌ம்பிக்கை]. எதிரிக்கு உத‌வாம‌லிருங்க‌ள் அதுவே போதும். கோடிக்க‌ண‌க்கில் வாரி வாரி இனாமாக‌ கொடுக்கிற‌து இந்திய‌ அர‌சு எதிரிக்கு. இராணுவ‌ உத‌வி கொடுக்க‌வில்லை என்று உத்தியோக‌பூர்வ‌ அறிக்கைக‌ள் விட்டு பின்ப‌க்க‌த்தில் இராணுவ‌ வீர‌ர்க‌ளையே கொடுக்கிற‌து. அப்போ த‌மிழ் நாட்டு அர‌சைக் கூட‌ இந்தியா க‌ண‌க்கிலெடுக்க‌வில்லை என்று தானே அர்த்த‌ம்?

இப்போ மீண்டும் இந்தியாவிலிருந்து வேறுப‌ட்டு “த‌மிழ‌ன்” என்ற‌ ரீதியில் த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் குர‌ல் கொடுக்க‌, இந்தியா “பிரிவினை” என்று சொல்லி மீண்டும் த‌மிழீழ‌ ம‌க்க‌ள் வாயில் ம‌ண்ணைப் போட்டு த‌ன் பாதையில் லாவ‌க‌மாக‌ ந‌ட‌ந்து போகிற‌து. மீண்டும் வ‌டிவேல் அர‌சிய‌ல் தான்.

அண்ணே வ‌டிவேல் அண்ணே, நீங்க‌ளாச்சும் அர‌சிய‌லுக்கு வ‌ந்து “த‌னித் த‌மிழீழ‌ம் தான் தீர்வு என்று சொல்லுங்க‌ண்ண‌.

“திருட‌னாய்ப் பார்த்து திருந்தாவிட்ட‌ல், திருட்டை ஒழிக்க‌ இய‌லாது” என்ற‌ பாட‌ல் தான் ஞாப‌க‌த்திற்கு வ‌ருகுது.

No responses yet

Oct 13 2008


இந்திய‌ த‌மிழ‌ர் அர‌சிய‌ல்

அமைதிக்காவும், ம‌னித‌நேய‌த்திற்காக‌வும் குர‌ல் கொடுப்போம்!

மேலே கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கோப்பு வாசிக்க‌ப் பெற்றேன்.

ப‌த‌வி ஆசை, குடும்ப‌ ந‌ல‌ம், க‌ட்சி இலாப‌ம், மேலோங்கி நிற்கிற‌து.

என‌க்கென்ன‌மோ, எந்த‌க் க‌ட்சி வ‌ந்தாலும் இது தான் நிலைமை என்று தோன்றுகிற‌து.

விஜ‌ய‌காந்த் கூட‌ க‌ட்சி அர‌சிய‌லில் தான் இப்போது சாய்கிறார் போலும் தெரிகிற‌து.

திமுக‌ கூட்டும் அனைத்துக் க‌ட்சிக் கூட்ட‌த்திற்கு போகாத‌த‌ற்கு கார‌ண‌ம் சொல்கிறார். அட‌ அர‌சிய‌ல் முக்கிய‌ம் இல்லை, த‌மிழ‌ர் பிர‌ச்சினை தான் முக்கிய‌ம் என்று நினைத்திருந்தால் சென்றிருப்பார்.

ம்ம்ம்… இந்தியாவில் ப‌த‌வி அர‌சிய‌ல் ம‌க்க‌ள் ந‌ல‌னை விட‌ முக்க‌மாக‌த் தான் தென்ப‌டுகிற‌து. சொல்வார்க‌ளே, அர‌சிய‌லில் சேரும் ந‌ல்ல‌வ‌ன் கூட‌ அர‌சிய‌ல் சாக்க‌டையில் சேர்ந்து விடுவான் என்று. அது இது தான் போலும்.

No responses yet

« புதிய இடுகைகள் - பழைய இடுகைகள் »

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.