இவற்றிற்கான களஞ்சியம் 'Tamil Eelam' வகை

Nov 25 2008


த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு

Filed under LTTE,Tamil Eelam

பிர‌பாக‌ர‌னின் வீடு

இது தாங்க‌ த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு. இப்ப‌டித் தான் இறுதியாக‌ வ‌ந்த‌ ச‌மாதான‌ கால‌த்தில் இருந்த‌து.

என்ன‌ ஆச்ச‌ரிய‌ம், எத்த‌னை பேரின்ரை வீடு த‌ரைம‌ட்ட‌ம் ஆக்க‌ப்ப‌ட்டிருந்தாலும், த‌லைவ‌ரின்ரையை விட்டு வைத்திருக்கிறார்க‌ள். [பெயின்ற் இப்போது அடித்த‌து, ஆனால், க‌ட்டிட‌ம் ப‌ழைய‌ க‌ட்டிட‌மே].

த‌லைவ‌ர் முத‌ன் முத‌லில் சிங்க‌ள‌ இராணுவ‌ம் வீடு தேடி வ‌ந்த‌போது ஒளிந்திருந்த‌ ம‌ர‌மும் தெரிகிற‌து.

என‌து பெற்றோர் ச‌மாதான‌ கால‌த்தில் த‌மிழீழ‌ம் சென்றிருந்த‌ போது அவ‌ர்க‌ள் போய்ப் பார்த்தார்க‌ள்.

இதில் இன்னும் விசேட‌ம் என்ன‌ தெரியுமா? ச‌மாதான‌ கால‌த்தில், சிங்க‌ள‌ ஊர்க‌ளில் இருந்து பேரூந்து சுற்றுலா வ‌ந்து எல்லாம் பார்த்தார்க‌ளாம். சில‌ர் போகும்போது ஒரு பிடி ம‌ண் எடுத்துக்கொண்டும் சென்றார்க‌ளாம்.

எதிர் கால‌த்தில் இந்த‌ வீடு ஒரு பெரும் சுற்றுலா த‌ல‌மாக‌ வ‌ந்தாலும் வ‌ரும், த‌மிழீழ‌ம் கிடைத்த‌ பின்.

த‌லைவ‌ரைப் போல் இந்த‌ வீடும் என்றும் சாயாது இருக்க‌ வேண்டும்.

2 responses so far

Nov 23 2008


மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ள் என்று சொல்வ‌து ச‌ரியா?

Filed under LTTE,Tamil Eelam,Tamils

மாவீர‌ர்க‌ளை நினைவுகூற‌‌ வேண்டும் என்று மாவீர‌ர் வார‌மாக‌ ந‌வ‌ம்ப‌ர் 21 முத‌ல் 27 வ‌ரை க‌டைப்பிடிக்க‌ப் ப‌டும் என்று த‌ல‌வ‌ர் இந்திய‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பின் நேர‌த்தில் வெளியிட்டார். அப்போது நானும் த‌மிழீழ‌த்தில் இருந்தேன். அது ப‌ற்றிய‌ என‌து ப‌திவை இங்கே ப‌டிக்க‌லாம்.

நேன்று நான் இருந்த‌ தொட‌ர் மாடிக் க‌ட்டிட‌ வ‌ளாக‌த்தில் மாவீர‌ர் நாள் க‌டைப்பிடிக்க‌ப் ப‌ட்ட‌து. ஒரு 75 பேர் அள‌வில் வ‌ந்திருந்தார்க‌ள். 6:30 ம‌ணிக்கு தொட‌ங்கும் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. 7 ம‌ணிக்கு க‌த‌வு பூட்ட‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் பின் வ‌ந்த‌வ‌ர்க‌ள் எவ‌ரும் உள் அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை, மாவீர‌ர் க‌ல்ல‌றைக்கு தீப‌ங்க‌ள் எல்லோரும் ஏற்றி முடியும் வ‌ரை.

வ‌ழ‌மை போல் எல்லாம் ந‌டைபெற்ற‌து. நான் இங்கு ப‌திவு போட‌க் கார‌ண‌ம் அது அல்ல‌. இந்த‌ நிக‌ழ்வை ந‌ட‌த்திய‌வ‌ர், மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று அடிக்க‌டி உறுதி கொண்டார்.

இப்ப‌டி த‌லைவ‌ர் எதையும் சொன்ன‌து இல்லை. மாவீர‌ர்க‌ளுக்கு அஞ்ச‌லி செலுத்த‌ வேண்டும் என்று சொன்ன‌து ம‌ட்டுமே. இன்னும் சொல்ல‌ப் போனால், ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ எதுவுமே இய‌க்க‌ ந‌டைமுறைக்குள் வ‌ர‌க்கூடாது என்ப‌தில் முடிவாக‌ இருப்ப‌வ‌ர். தீப‌ம் ஏற்றுத‌ல் என்ப‌து கூட‌ த‌மிழ் முறை என்ப‌தாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌தே ஒளிய‌ ச‌ம‌ய‌ ச‌ம்ப‌ந்த‌மாக‌ அல்ல‌. த‌லைவ‌ர் இந்துவாக‌ இருந்தால் கூட‌ இற‌ந்த‌வ‌ர்க‌ளை எரிக்காம‌ல், விதைத்து க‌ல்ல‌றை க‌ட்டினார். த‌ன் ம‌க‌னுக்கு த‌ன‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னான‌ சாள்ஸ் அண்ட‌னி என்று பெய‌ர் வைத்தார். த‌லைவ‌ரின் மூல‌ சிந்த‌னை, எந்த‌ ச‌ம‌ய‌ எந்த‌ வ‌ழித்தோன்ற‌ல் என்ற‌ பாகுபாடின்றி “த‌மிழ‌ன்” என்ற‌ ஒரு குடையின் கீழ் எல்லோரையும் இணைக்க‌வே போராடி வ‌ருகிறார். ஆரிய‌ரா திராவிட‌ரா என்ற‌ கேள்வியே இல்லாம‌ல், பூச‌க‌ராக‌ இருந்தால் கூட‌ த‌மிழ‌ன் என்று தான் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. நீ எந்த‌ ச‌ம‌ய‌, எந்த‌ வ‌ழித்தோன்ற‌லாக‌ இருப்ப‌து என்ப‌து முக்கிய‌ம் அல்ல‌, நீ த‌மிழ‌னாக‌ இரு. முசுலிம்க‌ள் தாங்க‌ள் “த‌மிழ‌ர்” அல்ல‌ “முசுலிம்” என்ற‌ வேறுப‌ட்ட‌ இன‌ம் என்று இல‌ங்கையில் பிரிந்து நின்ற‌ப‌டியால் [இந்தியாவில் அப்ப‌டி அல்ல‌] தான் ப‌ல‌ விரும்ப‌த்த‌காத‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌ந்தேறின‌. ச‌ரி அந்த‌ சிக்க‌லான‌ விட‌ய‌த்தைப் ப‌ற்றிய‌து அல்ல‌ என‌து ப‌திவு.

நேற்று ந‌ட‌ந்த‌ மாவீர‌ர் நாள் நிக‌ழ்வில், மாவீர‌ர்க‌ள் காவ‌ல் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று சொல்வ‌தை நான் வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கிறேன். நான் இறைவ‌னைத் த‌விர‌ உருவ‌ (அ) ப‌ட‌ வ‌ழிபாட்டில் ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌னாக‌ இருந்து, நான் மாவீர‌ர்க‌ளை வ‌ழிப‌ட‌ மாட்டேன் என்று சொன்னால், என்னை த‌மிழீழ‌த்திற்கு எதிரான‌வ‌ன் என்ற‌ ப‌ட்டிய‌லிலா போடுவீர்க‌ள்? அல்ல‌து நான் ஒரு உருவ‌ (அ) ப‌ட‌ வ‌ழிபாட்டிற்கு எதிரான‌ ஒரு ச‌ம‌ய‌த்தில் இருந்தால், இப்ப‌டி மாவிர‌ர்களை வ‌ழிப‌ட‌ மாட்டேன் என்று சொன்னால்? ஞாப‌க‌மிருக்க‌ட்டும், ந‌ம‌து த‌மிழீழ‌ போராட்ட‌த்தை ஒரு இந்து/ சைவ‌ ம‌க்க‌ளின் போராட்ட‌ம் ம‌ட்டுமே என்று மாற்றாதீர்க‌ள். இது ச‌ம‌ய‌ங்க‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு ஒன்றுப‌ட்ட‌ “த‌மிழ‌னின்” போராட்ட‌ம்.

நான் மாவீர‌ர்க‌ளை ம‌திக்கிறேன். அவ‌ர்க‌ளின் தியாக‌ம் அள‌ப்ப‌ரிய‌து. அவ‌ர்க‌ளுக்கு விள‌க்கேற்றி அஞ்ச‌லி செலுத்துகிறேன். அவ‌ர்க‌ளின் வேட்கை நிறைவேற‌ நான் வ‌ழிப‌டும் க‌ட‌வுளிட‌ம் பிராத்திக்கிறேன். ஆனால், நான் என‌து இறைவ‌னைத் த‌விர‌ வேறு எவ‌ரையும் (அ) எதையும் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ மாட்டேன்.

குறிப்பு:
நான் ஒரு ப‌ல‌ தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கும் இந்து. என‌க்காக‌ இதை எழுத‌வில்லை. இப்ப‌டி ஆத‌ங்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை நாங்க‌ள் ஒதுக்கிவிட‌க் கூடாது என்ற‌ ஆத‌ங்க‌த்தில் எழுதுகிறேன்.

No responses yet

Oct 30 2008


இந்தியாவின் உத‌வி

ஐயா நான் அன்று தொட்டு இதைத் தான் சொல்லி வ‌ருகிறேன்.

த‌மிழீழ‌ உண‌ர்வை உண‌ராம‌ல் “உத‌வி” என்ப‌து உத‌விய‌ல்ல‌.

த‌மிழீழ‌ம் தான் வேண்டும். புலிக‌ள் தான் எங்க‌ள் அர‌சு. உண‌ர்ந்து செய்வ‌தே “உத‌வி” என‌ நினைக்க‌ப்ப‌டும். இல்லையேல் “துரோக‌ம்” என‌ [இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தில் ந‌ட‌ந்த‌து போ] நினைக்க‌ப்ப‌டும்.

என்ன‌ தான் த‌லை கீழாக‌ நின்றாலும், “த‌மிழீழ‌ம்” தான் முடிவாக‌ இருக்க‌ வேண்டும். இல்லையேல் யார் செய்வ‌தும் “உத‌வி” என்று க‌ண‌க்கில் எடுப‌டாது. இதுவே இப்ப‌டி என்றால், “Sri Lanka’s territorial integrity” என்று சொல்லி த‌மிழீழ‌த்தை த‌டுக்க‌ எடுக்கும் எந்த‌ சிறு செய‌லும் “துரோக‌ம்” என்றே எண்ண‌ப்ப‌டும்.

இது தான் அன்றும் ந‌ட‌ந்த‌து.

புலிக‌ள் எங்க‌ளின் வ‌லிமைமிக்க‌ ப‌டை. பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் த‌லைவ‌ர். த‌மிழீழ‌ம் த‌ருகிறோம் பிர‌பாக‌ர‌னைத் தாருங்க‌ள் என்று சொன்னால் கூட‌ தாரை வார்க்க‌த் த‌யாரில்லை. ஏனென்றால், நாங்க‌ள் ப‌ல‌முறை ஏமாந்து போனோம். இல‌ங்கையிட‌ம் க‌ண‌க்கில‌டங்கா முறையும், இந்தியாவிட‌ம் கூட‌ ஏமாந்து போனோம். இனி த‌லைவ‌ரைத் த‌விர‌ வேறெவ‌ரையும் ந‌ம்ப‌த் த‌யாரில்லை.

ச‌மாதான‌ கால‌ந்தொட்டு ப‌ன்னாட்டு த‌ன்னார்வ‌ நிறுவ‌ன‌ங்க‌ள் [NGOs] த‌மிழீழ‌ ம‌க்க‌ளுக்கு உத‌வி வ‌ருகின்ற‌ன‌. ப‌ல‌ நாடுக‌ள் த‌மிழீழ‌ ம‌க்க‌ளுக்கு அடைக்க‌ல‌ம் கொடுத்து எவ்வ‌ள‌வோ வ‌ச‌திக‌ள் செய்து த‌ருகின்ற‌ன‌. த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளிட‌ம் அதை விட‌ மேல‌திக‌மாக‌ எதிர்பார்க்கிறோம். வேற்றான் உத‌விய‌ அள‌வே ச‌கோத‌ர‌னும் உத‌வி செய்வ‌தென்றால், வேற்றானுக்கும் ச‌கோத‌ர‌னுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

எத்த‌னை வ‌ருட‌ங்க‌ள், எத்த‌னை இழ‌ப்புக்க‌ள், எத்த‌னை வ‌லிக‌ளைக் க‌ட‌ந்து வ‌ந்துவிட்டோம். இன்னும் சோறு அனுப்புகிறோம்; ஒன்றுப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் இருந்து சாப்பிடுங்க‌ள் என்றால் கோப‌ம் வ‌ராம‌ல் வேறு என்ன‌ வ‌ரும்?

சீன‌ க‌தை/ ப‌ழ‌மொழி: ஒருவ‌னுகு மீனைப் பிடித்துக் கொடுத்தால் அவ‌னுக்கு அன்று உண்வு. ஆனால், அதே ந‌ப‌ருக்கு மீன் பிடிக்க‌க் க‌ற்றுக்கொடுத்தால் வாழ் நாள் பூராவும் உண‌வு.

எத்த‌னை முறை இப்ப‌டியே சோறு த‌ந்து “உத‌வ‌ப்” போறீங்க‌ள். நாங்க‌ளாக‌ சோறு செய்ய‌ உத‌வுவ‌து தான் வேண்டும்.

சாதார‌ண‌மாக‌வே ஒருவ‌ன் நெருங்கிய‌ உற‌வின‌ர்க‌ளிட‌ம் அதிக‌மாக‌ எதிர்பார்ப்பான் ம‌ற்ற‌ய‌வ‌ர்க‌ளை விட‌. அதே போல் தான் த‌மிழீழ‌ ம‌க்க‌ளும் த‌மிழ் நாட்டிட‌ம் ம‌ற்ற‌ய‌ உல‌க‌ ந‌டுக‌ளை விட‌ அதிக‌மாக‌ எதிர்பார்க்கிறோம். ஆனால், மீண்டும் மீண்டும் இந்தியாவின் “ஒன்றுபட்ட‌ இல‌ங்கை” என்று சொல்லி எங்க‌ளுக்கு கோப‌த்தைத் தான் கூட்டுகிற‌து.

இவ்வ‌ள‌வு கால‌த்திற்கு பிற‌காவ‌து, த‌மிழீழ‌ம் கிடைக்கும் ம‌ட்டும் இவ‌ர்க‌ள் ஓய‌மாட்ட‌ர்க‌ள் என்ப‌தை உண‌ர‌வேண்டும். த‌மிழீழ‌ம் நிச்ச‌ய‌ம். இந்தியாவின் ச‌ம்ம‌த‌த்தோடோ (அ) இல்லாம‌லோ, த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும். அது இந்தியாவால் ம‌ல‌ர்ந்தால் எல்லோருக்கும் ந‌ல்ல‌து.

உண்மையில் உத‌வ‌ எண்ணினால், த‌மிழீழ‌ம் உருவாகுவ‌த‌ற்கு குர‌ல் கொடுங்க‌ள்.

No responses yet

Oct 27 2008


வ‌டிவேல் அர‌சிய‌லும், த‌மிழீழ‌மும்

  • த‌மிழ‌ர்க‌ளுக்குத் த‌மிழீழ‌ம் வேண்டும். இதை எதிர்ப்ப‌வ‌ர் எல்லோரும் எதிரிக‌ளாக‌த் தான் பார்க்க‌ப் ப‌டுவார்க‌ள்.
  • சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இல‌ங்கையைப் பிரிக்க‌ எத்த‌ணிக்கும் எவ‌ரும் எதிரிக‌ளாக‌ப் பார்க்கிறார்க‌ள்.
  • ஆனால் வ‌ர‌லாற்றில் இர‌ண்டும் வேறு வேறு நாடுக‌ளாக‌த் தான் இருந்த‌ன‌ என்ப‌தை சிங்க‌ள‌ அர‌சு க‌ண‌க்கிலெடுக்குதில்லை.

இத‌னால் தான் இந்திய‌ இராணுவ‌ம் இல‌ங்கை வ‌ந்த‌ போது, த‌மிழ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள், சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள். இறுதியில் எதிரியின் எதிரி ந‌ண்ப‌ன் என்ற‌ சூட்சும‌த்தைக் கையாண்டுவிட்டார்க‌ள்.

என்ன‌மோ ஏதோ, இந்தியா பொய்க் கார‌ண‌ங்க‌ளைச் சொல்லி த‌மிழீழ‌ம் அமைவ‌தைத் த‌டுப்ப‌தில் மூச்சாக‌ இருக்கிற‌து. வ‌ங்காள‌ தேச‌ம் அமைக்கும்போது இந்தியாவிலும் பிரிவினை வ‌ரும் என்று எண்ணாத‌ இந்தியா இப்போது ம‌ட்டும் ஏதோ க‌வ‌லைப்ப‌டுவ‌து போல் காட்டிக்கொள்கிற‌து. உண்மையில் அப்போது தான் இந்தியா பிரிவ‌த‌ற்கான‌ ப‌ல‌ கார‌ணிக‌ள் இருந்த‌ன‌. புதிதாக‌ உருவாகிய‌ இந்தியா, நாட்டு அர‌சிய‌ல் எப்ப‌டி இருக்கும் என்று தெரியாத‌ ப‌ல‌ தேச‌ங்க‌ள். இந்து முசுலிம் க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ கால‌ம்.
இல‌ங்கை அர‌சின் வாக்குறுதிக‌ளுக்கு ம‌ன‌ம் ஆறுதல‌டைய‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளைச் சொல்கிற‌து. 20 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ த‌மிழ‌க‌ மீனவ‌ர்க‌ளைக் கொல்ல‌மாட்டோம் என்று தான் இல‌ங்கை அர‌சு வாக்குறுதி கொடுத்துக்கொண்டு வ‌ருகிற‌து. அதை அப்ப‌டியே ந‌ம்பும்ப‌டி த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌ம் சொல்லுகிற‌து. அவ‌ர்க‌ளும் வ‌டிவேல் பாணியில் [அதாங்க‌, எவ்வ‌ள‌வு தான் அடிச்சாலும் என்ன‌ தான் ப‌ண்ணினாலும் க‌டையிசில் தான் பெரிய‌ ஆள், வெற்றி பெற்ற‌ மாதிரி ப‌ட‌ங்காட்டுற‌து] அர‌சிய‌ல் ப‌ண்ணுகிறார்க‌ள்.

த‌மிழீழ‌ம் அன்றி வேறேதும் தீர்வாகாது ஈழ‌த் த‌ம்ழ‌ருக்கு. இதை ஒத்துக்க‌ ம‌றுத்து க‌டும்போக்காக‌ வ‌ரும்போது த‌மிழ் நாட்டு ம‌க்க‌ள் கொதித்தெழுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் த‌மிழீழ‌த்திற்கு ஆத‌ர‌வு த‌ரும்போது இந்தியா ம‌றுக்க‌, இந்தியாவிலிருந்து வேறுப‌ட்டு “த‌மிழ‌ன்” என்று த‌னித்து கோரிக்கை எழுப்ப‌, இந்தியா “பாத்தீங்க‌ளா, த‌மிழீழ‌ம் கிடைச்சால் பிற‌கு இந்தியாவிலும் பிரிவினை தான் என்று நான் சொன்னேன் தானே” என்று குண்டைத் தூக்கிப் போட்டு த‌மிழீழ‌ ம‌க்க‌ள் வாயில் ம‌ண்ணைப் போடுகிற‌து. க‌டைசியில் இந்தியாவின் எண்ண‌ம் ஈடேறுகிற‌து.

த‌மிழீழ‌ ம‌க்க‌ள் கேட்ப‌தெல்லாம் ஒன்று: “உத‌வி செய்யாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை, உவ‌த்திர‌மாவ‌து செய்யாதிருங்க‌ள்”.

த‌மிழீழ‌ம் பெற்றுத்த‌ராவிட்டாலும் ப‌ர‌வாயில்லை. [த‌மிழீழ‌ம் ஈழ‌த்த‌மிழ‌னால் ம‌ட்டுமே வென்றெடுக்க‌ முடியும் என்ப‌து த‌லைவ‌ரின் ந‌ம்பிக்கை]. எதிரிக்கு உத‌வாம‌லிருங்க‌ள் அதுவே போதும். கோடிக்க‌ண‌க்கில் வாரி வாரி இனாமாக‌ கொடுக்கிற‌து இந்திய‌ அர‌சு எதிரிக்கு. இராணுவ‌ உத‌வி கொடுக்க‌வில்லை என்று உத்தியோக‌பூர்வ‌ அறிக்கைக‌ள் விட்டு பின்ப‌க்க‌த்தில் இராணுவ‌ வீர‌ர்க‌ளையே கொடுக்கிற‌து. அப்போ த‌மிழ் நாட்டு அர‌சைக் கூட‌ இந்தியா க‌ண‌க்கிலெடுக்க‌வில்லை என்று தானே அர்த்த‌ம்?

இப்போ மீண்டும் இந்தியாவிலிருந்து வேறுப‌ட்டு “த‌மிழ‌ன்” என்ற‌ ரீதியில் த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் குர‌ல் கொடுக்க‌, இந்தியா “பிரிவினை” என்று சொல்லி மீண்டும் த‌மிழீழ‌ ம‌க்க‌ள் வாயில் ம‌ண்ணைப் போட்டு த‌ன் பாதையில் லாவ‌க‌மாக‌ ந‌ட‌ந்து போகிற‌து. மீண்டும் வ‌டிவேல் அர‌சிய‌ல் தான்.

அண்ணே வ‌டிவேல் அண்ணே, நீங்க‌ளாச்சும் அர‌சிய‌லுக்கு வ‌ந்து “த‌னித் த‌மிழீழ‌ம் தான் தீர்வு என்று சொல்லுங்க‌ண்ண‌.

“திருட‌னாய்ப் பார்த்து திருந்தாவிட்ட‌ல், திருட்டை ஒழிக்க‌ இய‌லாது” என்ற‌ பாட‌ல் தான் ஞாப‌க‌த்திற்கு வ‌ருகுது.

No responses yet

Aug 10 2008


திருகோண‌ம‌லையின் நிலை

Filed under Sri Lanka,Tamil Eelam

க‌ன‌டாவில் த‌மிழ் கார்னிவேல் [Tamil Carnival] நேற்றும் இன்றும் [August 9, 10] ந‌டைபெறுகிற‌து.

நான் நேற்று எங்க‌ள் அண்ண‌ன் குடும்ப‌த்துட‌ன் சென்றிருந்தேன். நாள் முழுவ‌தும் ம‌ழை. த‌மிழ் கார்னிவேல் வெட்ட‌ வெளியில் ந‌ட‌ப்ப‌தால், மிக‌க் குறைந்த‌ அள‌விலான‌ ச‌ன‌மே [வ‌ழ‌மைக்கு மாறாக‌] வ‌ந்திருந்தார்க‌ள். இன்றாவ‌து ம‌ழை பெய்யாம‌ல் ந‌ட‌த்துன‌ர்க‌ளுக்கு ந‌ட்ட‌ம் வ‌ராம‌ல் இய‌ற்கை அன்னை வ‌ழிச‌மைப்பாளாக‌.

ச‌ரி விச‌ய‌த்திற்கு வ‌ருகிறேன். சாப்பிட‌லாம் என்று சாப்பாடு வாங்க‌ ஒரு க‌டை [வெட்ட‌வெளியில் த‌ற்காலிக‌மாக‌ போட‌ப்ப‌ட்ட‌ க‌டை (using tent)] அருகே ஒதிங்கினேன். அங்கே ஒருவ‌ருட‌ன் உரையாடினேன். அவ‌ர் அர‌ச‌ வேலை பார்க்கிறாராம். சும்மா உத்தியோக‌ம் இல்லைங்க‌ , அர‌ச‌ பாதுகாப்பு ப‌டையுட‌‌ன‌னான‌ வேலை [ஆனால் இவ‌ர் போராளி அல்ல‌]. என‌க்கு கொஞ்ச‌ம் த‌ய‌க்க‌ம், அர‌ச‌ சார்பான‌ ஆளோ என்று.

க‌ன‌டா வ‌ந்து 2 கிழ‌மைக‌ள் தானாம்.

திருகோண‌ம‌லையில் பிள்ளையான் குழுவின் அட்ட‌காச‌ம் தாங்க‌ முடிய‌வில்லை என்றார். அவ‌ர்க‌ள் புலி உடுப்பு போட்டுக்கொண்டு வ‌ருவார்க‌ளாம். உங்க‌ளோடு சும்ம‌ வ‌ந்து க‌தைப்பார்க‌ளாம். அப்ப‌டி க‌தையோடு க‌தையாக‌ இன்னொருவ‌ர் ப‌ட‌ம் [photo] எடுப்பாராம். பிற‌கென்ன‌, அதை வைத்தே, நீ புலிக‌ளுட‌ன் தொட‌ர்புள்ள‌ ஆள், என்று வெருட்டியே ப‌ண‌ம் ப‌றிப்பார்க‌ளாம்.

நீங்க‌ள் வாக‌ன‌ம் ஏதாவ‌து வைத்திருந்தால் வீட்டிற்கு வ‌ந்து வாக‌ன‌த்தைத் த‌ரும்ப‌டி கேட்பார்க‌ளாம். குடுக்க‌ வேண்டும். அப்ப‌டி குடுக்க‌வில்லை என்றால், பிற‌கு பிர‌ச்சினை ஆர‌ம்ப‌ம் தானாம். அடிக்க‌டி வ‌ந்து புலி ஆத‌ர‌வாள‌ரா, வீட்டில் உள்ள‌வ‌ர்க‌ளை அடிப்பார்க‌ளாம், ப‌ண‌ம் தா என்று தொந்த‌ர‌வு தானாம். அவ‌ர் த‌ன்னுடைய‌ வாக‌ன‌த்தை பெருசு [அர‌சு] பாவிக்க‌வும் தான் கொடுப்ப‌தால் அவ‌ரிட‌ம் இன்னும் ஒரு தொந்த‌ர‌வும் செய்ய‌வில்லையாம்.

நான் கேட்டேன், நீங்க‌ள் அர‌சு பாதுகாப்புப் ப‌டைக‌ளுட‌ன் தான் உங்க‌ள் வேலை, புலி அடித்தால் நீங்க‌ளும‌ல்ல‌வா போய்ச்சேர்ந்து விடுவீர்க‌ள் என்றேன். அத‌ற்கு அவ‌ர், ஆமாம் இற‌ந்தால் த‌ன் பெய‌ரும் சிங்க‌ள‌ப் ப‌டைக‌ளுட‌ன் வ‌ரும். த‌ன் வேலை அப்ப‌டி என்றார்.

புலிக‌ள் திருகோண‌ம‌லை துறைமுக‌த்தில் ஒரு ப‌ட‌கை இர‌வோடு இர‌வாக‌ மூழ்க‌டித்த‌ செய்தி கேள்விப்ப‌ட்டிருப்பீர்க‌ள். அது ந‌ட‌ந்த‌ ச‌மய‌ம்,  சிங்க‌ள‌ப் ப‌டைக‌ள் மிக‌வும் ப‌ய‌ந்து விட்ட‌தாம். சிங்க‌ள‌ப் ப‌டைக‌ள் நினைத்தார்க‌ளாம், புலிக‌ள் விமான‌த் தாக்குத‌ல் தான் ந‌ட‌த்திவிட்டார்க‌ள் என்று. அந்த‌ப் ப‌ட‌கு க‌வுண்டு விட்ட‌தாம். அதை நிமிர்த்துவ‌திலும் அதில் உள்ள‌ சாமான்க‌ளை எடுப்ப‌திலும் இன்னும் முய‌ற்சித்துக்கொண்டு தான் இருக்கிறார்க‌ளாம். ஆனால், எந்த‌ சிப்பாயும் இற‌க்க‌வில்லை என்றார். அவ‌ர்க‌ள் பாய்ந்த்துவிட்டார்க‌ளாம்.

ஒரு ச‌ம‌ர் ப‌ற்றி அவ‌ர் சொன்னார். அவ‌ரின் பாதுகாப்புக் க‌ருதி அதை இங்கே கூற‌வில்லை.

அங்கு எல்லோரும் இப்போது புலிக‌ளுக்குத் தானாம் ஆத‌ர‌வாம். பிள்ளையானின் அட்ட‌காச‌ங்க‌ளால் மிக‌வும் வெறுத்துப் போய் இருக்கிறார்க‌ளாம். ஆனால் எல்லோரும் தாங்க‌ள் பிள்ளையான் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்று தான் சொல்லிக்கொள்கிறார்க‌ளாம், பிள்ளையானுக்குப் ப‌ய‌ந்து. பிள்ளையான் குழுவில் சேர்ந்த்த‌வ‌ர்க‌ள் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கிறார்க‌ளாம். அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ங்கிக் க‌ண‌க்கில் கோடிக்க‌ண‌க்கான‌ ப‌ண‌ம் சேர்க்ப‌ட்டு இருக்கிற‌தாம்.

அவ‌ர் இன்னும் ஒன்று சொன்னார். என்னை மிக‌வும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌து. தான் இங்கு [க‌ன‌டாவில்] த‌ங்க‌வில்லை; தான் மீண்டும் போக‌ப்போகிறேன் என்றார்.  அங்க‌த்தை வாழ்க்கை ஒரு thrilling ஆக‌ இருக்கு என்றார்.

One response so far

« புதிய இடுகைகள் - பழைய இடுகைகள் »

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.