இவற்றிற்கான களஞ்சியம் 'LTTE' வகை

Nov 25 2008


த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு

Filed under LTTE,Tamil Eelam

பிர‌பாக‌ர‌னின் வீடு

இது தாங்க‌ த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு. இப்ப‌டித் தான் இறுதியாக‌ வ‌ந்த‌ ச‌மாதான‌ கால‌த்தில் இருந்த‌து.

என்ன‌ ஆச்ச‌ரிய‌ம், எத்த‌னை பேரின்ரை வீடு த‌ரைம‌ட்ட‌ம் ஆக்க‌ப்ப‌ட்டிருந்தாலும், த‌லைவ‌ரின்ரையை விட்டு வைத்திருக்கிறார்க‌ள். [பெயின்ற் இப்போது அடித்த‌து, ஆனால், க‌ட்டிட‌ம் ப‌ழைய‌ க‌ட்டிட‌மே].

த‌லைவ‌ர் முத‌ன் முத‌லில் சிங்க‌ள‌ இராணுவ‌ம் வீடு தேடி வ‌ந்த‌போது ஒளிந்திருந்த‌ ம‌ர‌மும் தெரிகிற‌து.

என‌து பெற்றோர் ச‌மாதான‌ கால‌த்தில் த‌மிழீழ‌ம் சென்றிருந்த‌ போது அவ‌ர்க‌ள் போய்ப் பார்த்தார்க‌ள்.

இதில் இன்னும் விசேட‌ம் என்ன‌ தெரியுமா? ச‌மாதான‌ கால‌த்தில், சிங்க‌ள‌ ஊர்க‌ளில் இருந்து பேரூந்து சுற்றுலா வ‌ந்து எல்லாம் பார்த்தார்க‌ளாம். சில‌ர் போகும்போது ஒரு பிடி ம‌ண் எடுத்துக்கொண்டும் சென்றார்க‌ளாம்.

எதிர் கால‌த்தில் இந்த‌ வீடு ஒரு பெரும் சுற்றுலா த‌ல‌மாக‌ வ‌ந்தாலும் வ‌ரும், த‌மிழீழ‌ம் கிடைத்த‌ பின்.

த‌லைவ‌ரைப் போல் இந்த‌ வீடும் என்றும் சாயாது இருக்க‌ வேண்டும்.

2 responses so far

Nov 23 2008


மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ள் என்று சொல்வ‌து ச‌ரியா?

Filed under LTTE,Tamil Eelam,Tamils

மாவீர‌ர்க‌ளை நினைவுகூற‌‌ வேண்டும் என்று மாவீர‌ர் வார‌மாக‌ ந‌வ‌ம்ப‌ர் 21 முத‌ல் 27 வ‌ரை க‌டைப்பிடிக்க‌ப் ப‌டும் என்று த‌ல‌வ‌ர் இந்திய‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பின் நேர‌த்தில் வெளியிட்டார். அப்போது நானும் த‌மிழீழ‌த்தில் இருந்தேன். அது ப‌ற்றிய‌ என‌து ப‌திவை இங்கே ப‌டிக்க‌லாம்.

நேன்று நான் இருந்த‌ தொட‌ர் மாடிக் க‌ட்டிட‌ வ‌ளாக‌த்தில் மாவீர‌ர் நாள் க‌டைப்பிடிக்க‌ப் ப‌ட்ட‌து. ஒரு 75 பேர் அள‌வில் வ‌ந்திருந்தார்க‌ள். 6:30 ம‌ணிக்கு தொட‌ங்கும் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. 7 ம‌ணிக்கு க‌த‌வு பூட்ட‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் பின் வ‌ந்த‌வ‌ர்க‌ள் எவ‌ரும் உள் அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை, மாவீர‌ர் க‌ல்ல‌றைக்கு தீப‌ங்க‌ள் எல்லோரும் ஏற்றி முடியும் வ‌ரை.

வ‌ழ‌மை போல் எல்லாம் ந‌டைபெற்ற‌து. நான் இங்கு ப‌திவு போட‌க் கார‌ண‌ம் அது அல்ல‌. இந்த‌ நிக‌ழ்வை ந‌ட‌த்திய‌வ‌ர், மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று அடிக்க‌டி உறுதி கொண்டார்.

இப்ப‌டி த‌லைவ‌ர் எதையும் சொன்ன‌து இல்லை. மாவீர‌ர்க‌ளுக்கு அஞ்ச‌லி செலுத்த‌ வேண்டும் என்று சொன்ன‌து ம‌ட்டுமே. இன்னும் சொல்ல‌ப் போனால், ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ எதுவுமே இய‌க்க‌ ந‌டைமுறைக்குள் வ‌ர‌க்கூடாது என்ப‌தில் முடிவாக‌ இருப்ப‌வ‌ர். தீப‌ம் ஏற்றுத‌ல் என்ப‌து கூட‌ த‌மிழ் முறை என்ப‌தாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌தே ஒளிய‌ ச‌ம‌ய‌ ச‌ம்ப‌ந்த‌மாக‌ அல்ல‌. த‌லைவ‌ர் இந்துவாக‌ இருந்தால் கூட‌ இற‌ந்த‌வ‌ர்க‌ளை எரிக்காம‌ல், விதைத்து க‌ல்ல‌றை க‌ட்டினார். த‌ன் ம‌க‌னுக்கு த‌ன‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னான‌ சாள்ஸ் அண்ட‌னி என்று பெய‌ர் வைத்தார். த‌லைவ‌ரின் மூல‌ சிந்த‌னை, எந்த‌ ச‌ம‌ய‌ எந்த‌ வ‌ழித்தோன்ற‌ல் என்ற‌ பாகுபாடின்றி “த‌மிழ‌ன்” என்ற‌ ஒரு குடையின் கீழ் எல்லோரையும் இணைக்க‌வே போராடி வ‌ருகிறார். ஆரிய‌ரா திராவிட‌ரா என்ற‌ கேள்வியே இல்லாம‌ல், பூச‌க‌ராக‌ இருந்தால் கூட‌ த‌மிழ‌ன் என்று தான் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. நீ எந்த‌ ச‌ம‌ய‌, எந்த‌ வ‌ழித்தோன்ற‌லாக‌ இருப்ப‌து என்ப‌து முக்கிய‌ம் அல்ல‌, நீ த‌மிழ‌னாக‌ இரு. முசுலிம்க‌ள் தாங்க‌ள் “த‌மிழ‌ர்” அல்ல‌ “முசுலிம்” என்ற‌ வேறுப‌ட்ட‌ இன‌ம் என்று இல‌ங்கையில் பிரிந்து நின்ற‌ப‌டியால் [இந்தியாவில் அப்ப‌டி அல்ல‌] தான் ப‌ல‌ விரும்ப‌த்த‌காத‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌ந்தேறின‌. ச‌ரி அந்த‌ சிக்க‌லான‌ விட‌ய‌த்தைப் ப‌ற்றிய‌து அல்ல‌ என‌து ப‌திவு.

நேற்று ந‌ட‌ந்த‌ மாவீர‌ர் நாள் நிக‌ழ்வில், மாவீர‌ர்க‌ள் காவ‌ல் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று சொல்வ‌தை நான் வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கிறேன். நான் இறைவ‌னைத் த‌விர‌ உருவ‌ (அ) ப‌ட‌ வ‌ழிபாட்டில் ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌னாக‌ இருந்து, நான் மாவீர‌ர்க‌ளை வ‌ழிப‌ட‌ மாட்டேன் என்று சொன்னால், என்னை த‌மிழீழ‌த்திற்கு எதிரான‌வ‌ன் என்ற‌ ப‌ட்டிய‌லிலா போடுவீர்க‌ள்? அல்ல‌து நான் ஒரு உருவ‌ (அ) ப‌ட‌ வ‌ழிபாட்டிற்கு எதிரான‌ ஒரு ச‌ம‌ய‌த்தில் இருந்தால், இப்ப‌டி மாவிர‌ர்களை வ‌ழிப‌ட‌ மாட்டேன் என்று சொன்னால்? ஞாப‌க‌மிருக்க‌ட்டும், ந‌ம‌து த‌மிழீழ‌ போராட்ட‌த்தை ஒரு இந்து/ சைவ‌ ம‌க்க‌ளின் போராட்ட‌ம் ம‌ட்டுமே என்று மாற்றாதீர்க‌ள். இது ச‌ம‌ய‌ங்க‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு ஒன்றுப‌ட்ட‌ “த‌மிழ‌னின்” போராட்ட‌ம்.

நான் மாவீர‌ர்க‌ளை ம‌திக்கிறேன். அவ‌ர்க‌ளின் தியாக‌ம் அள‌ப்ப‌ரிய‌து. அவ‌ர்க‌ளுக்கு விள‌க்கேற்றி அஞ்ச‌லி செலுத்துகிறேன். அவ‌ர்க‌ளின் வேட்கை நிறைவேற‌ நான் வ‌ழிப‌டும் க‌ட‌வுளிட‌ம் பிராத்திக்கிறேன். ஆனால், நான் என‌து இறைவ‌னைத் த‌விர‌ வேறு எவ‌ரையும் (அ) எதையும் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ மாட்டேன்.

குறிப்பு:
நான் ஒரு ப‌ல‌ தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கும் இந்து. என‌க்காக‌ இதை எழுத‌வில்லை. இப்ப‌டி ஆத‌ங்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை நாங்க‌ள் ஒதுக்கிவிட‌க் கூடாது என்ற‌ ஆத‌ங்க‌த்தில் எழுதுகிறேன்.

No responses yet

Oct 30 2008


இந்தியாவின் உத‌வி

ஐயா நான் அன்று தொட்டு இதைத் தான் சொல்லி வ‌ருகிறேன்.

த‌மிழீழ‌ உண‌ர்வை உண‌ராம‌ல் “உத‌வி” என்ப‌து உத‌விய‌ல்ல‌.

த‌மிழீழ‌ம் தான் வேண்டும். புலிக‌ள் தான் எங்க‌ள் அர‌சு. உண‌ர்ந்து செய்வ‌தே “உத‌வி” என‌ நினைக்க‌ப்ப‌டும். இல்லையேல் “துரோக‌ம்” என‌ [இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தில் ந‌ட‌ந்த‌து போ] நினைக்க‌ப்ப‌டும்.

என்ன‌ தான் த‌லை கீழாக‌ நின்றாலும், “த‌மிழீழ‌ம்” தான் முடிவாக‌ இருக்க‌ வேண்டும். இல்லையேல் யார் செய்வ‌தும் “உத‌வி” என்று க‌ண‌க்கில் எடுப‌டாது. இதுவே இப்ப‌டி என்றால், “Sri Lanka’s territorial integrity” என்று சொல்லி த‌மிழீழ‌த்தை த‌டுக்க‌ எடுக்கும் எந்த‌ சிறு செய‌லும் “துரோக‌ம்” என்றே எண்ண‌ப்ப‌டும்.

இது தான் அன்றும் ந‌ட‌ந்த‌து.

புலிக‌ள் எங்க‌ளின் வ‌லிமைமிக்க‌ ப‌டை. பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் த‌லைவ‌ர். த‌மிழீழ‌ம் த‌ருகிறோம் பிர‌பாக‌ர‌னைத் தாருங்க‌ள் என்று சொன்னால் கூட‌ தாரை வார்க்க‌த் த‌யாரில்லை. ஏனென்றால், நாங்க‌ள் ப‌ல‌முறை ஏமாந்து போனோம். இல‌ங்கையிட‌ம் க‌ண‌க்கில‌டங்கா முறையும், இந்தியாவிட‌ம் கூட‌ ஏமாந்து போனோம். இனி த‌லைவ‌ரைத் த‌விர‌ வேறெவ‌ரையும் ந‌ம்ப‌த் த‌யாரில்லை.

ச‌மாதான‌ கால‌ந்தொட்டு ப‌ன்னாட்டு த‌ன்னார்வ‌ நிறுவ‌ன‌ங்க‌ள் [NGOs] த‌மிழீழ‌ ம‌க்க‌ளுக்கு உத‌வி வ‌ருகின்ற‌ன‌. ப‌ல‌ நாடுக‌ள் த‌மிழீழ‌ ம‌க்க‌ளுக்கு அடைக்க‌ல‌ம் கொடுத்து எவ்வ‌ள‌வோ வ‌ச‌திக‌ள் செய்து த‌ருகின்ற‌ன‌. த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளிட‌ம் அதை விட‌ மேல‌திக‌மாக‌ எதிர்பார்க்கிறோம். வேற்றான் உத‌விய‌ அள‌வே ச‌கோத‌ர‌னும் உத‌வி செய்வ‌தென்றால், வேற்றானுக்கும் ச‌கோத‌ர‌னுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

எத்த‌னை வ‌ருட‌ங்க‌ள், எத்த‌னை இழ‌ப்புக்க‌ள், எத்த‌னை வ‌லிக‌ளைக் க‌ட‌ந்து வ‌ந்துவிட்டோம். இன்னும் சோறு அனுப்புகிறோம்; ஒன்றுப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் இருந்து சாப்பிடுங்க‌ள் என்றால் கோப‌ம் வ‌ராம‌ல் வேறு என்ன‌ வ‌ரும்?

சீன‌ க‌தை/ ப‌ழ‌மொழி: ஒருவ‌னுகு மீனைப் பிடித்துக் கொடுத்தால் அவ‌னுக்கு அன்று உண்வு. ஆனால், அதே ந‌ப‌ருக்கு மீன் பிடிக்க‌க் க‌ற்றுக்கொடுத்தால் வாழ் நாள் பூராவும் உண‌வு.

எத்த‌னை முறை இப்ப‌டியே சோறு த‌ந்து “உத‌வ‌ப்” போறீங்க‌ள். நாங்க‌ளாக‌ சோறு செய்ய‌ உத‌வுவ‌து தான் வேண்டும்.

சாதார‌ண‌மாக‌வே ஒருவ‌ன் நெருங்கிய‌ உற‌வின‌ர்க‌ளிட‌ம் அதிக‌மாக‌ எதிர்பார்ப்பான் ம‌ற்ற‌ய‌வ‌ர்க‌ளை விட‌. அதே போல் தான் த‌மிழீழ‌ ம‌க்க‌ளும் த‌மிழ் நாட்டிட‌ம் ம‌ற்ற‌ய‌ உல‌க‌ ந‌டுக‌ளை விட‌ அதிக‌மாக‌ எதிர்பார்க்கிறோம். ஆனால், மீண்டும் மீண்டும் இந்தியாவின் “ஒன்றுபட்ட‌ இல‌ங்கை” என்று சொல்லி எங்க‌ளுக்கு கோப‌த்தைத் தான் கூட்டுகிற‌து.

இவ்வ‌ள‌வு கால‌த்திற்கு பிற‌காவ‌து, த‌மிழீழ‌ம் கிடைக்கும் ம‌ட்டும் இவ‌ர்க‌ள் ஓய‌மாட்ட‌ர்க‌ள் என்ப‌தை உண‌ர‌வேண்டும். த‌மிழீழ‌ம் நிச்ச‌ய‌ம். இந்தியாவின் ச‌ம்ம‌த‌த்தோடோ (அ) இல்லாம‌லோ, த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும். அது இந்தியாவால் ம‌ல‌ர்ந்தால் எல்லோருக்கும் ந‌ல்ல‌து.

உண்மையில் உத‌வ‌ எண்ணினால், த‌மிழீழ‌ம் உருவாகுவ‌த‌ற்கு குர‌ல் கொடுங்க‌ள்.

No responses yet

Feb 23 2008


வே. பிரபாகரன் இறைவனின் அவதாரம்!

ஆண்டாண்டு காலமாக யுத்தமெனும் சாபம் பிடித்து அலைகிறது இலங்கை.
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது.

ஒருவர் சரியான சாமி பக்தனாம்.  அவர் வாழ்ந்த ஊரில் வெள்ளம் வந்ததாம்.  அவர் தன்னைக் காப்பாற்ற கடவுள் வருவார் என்று நம்பினாராம்.  ஊரார் வெளியேறும் போது அவரை கூட்டிச்செல்கிறோம் என்று கேட்க அவர் இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொன்னாராம். வெள்ளம் பெருகிவிட்டது. பிறகு ஒரு சிறு வள்ளத்தில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம்.  அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம்.  பிறகு உலங்குவானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு இதில் ஆவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து இல்லை இல்லை என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம்.  சரி வெள்ளம் பெருகி மோசமாகி அவர் அதில் மூழ்கி மாண்டுவிட்டாராம்.

மேலே ஆவியாய் போய் இறைவனிடம் சேர்ந்தார்.  இவர் இறைவனைக் கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை ஏன் நீ காப்பாற்ற வரவில்லை என்று.  அதற்கு அவர் சொன்னாராம், அட முட்டாளே நான் உன்னைக் காப்பாற்ற மூன்று முறை வந்தேன், நீ தான் வர மறுத்துவிட்டாய் என்றாராம்.

இறைவன் இப்படித் தான் ஏதாவது ஒரு வளியில் தான் உதவுவார்.  தலைவர் வே. பிரபாகரன் இறைவரனின் அவதாரம்!

2 responses so far

Feb 23 2008


தமிழர்களுக்கு ஏன் இந்தத் துரோகம், இந்தியா?

 மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயிற்கு ஆதரவளித்து தூண்டிவிட்ட ‘வீர’ சாவர்க்கன் {RSS தலைவர்} இன் படம் இந்திய நாடாளுமன்றத்தில் தொங்கவிட்டிருக்கிறீர்கள்.

இந்திரா காந்தியைக் கொன்ற புயன் சிங் இற்கு இன்றும் நினைவு நாள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் {இந்திரா காந்தி கொல்லப்பட்ட நாளான 18ந் திகதி}.  அவருடை பிள்ளைகளை உருத்துவாரா பிரபஞ்சக் கமிட்டி தத்தெடுத்து வளர்த்து வருகிறது.  மிக அண்மையில், சத்வந் சிங், கேகர் சிங் ஐ சீக்கிய தேசத்தின் {Sikh Nation} தியாகசீலர்கள் என்று அறிவித்து விழாக் கொண்டாடினார்கள்.  நாங்கள் தனுவிற்கு விழா எடுத்தோமா?

http://www.youtube.com/watch?v=WpCk9d0gtbc

http://www.youtube.com/watch?v=o2p24Qe5a0E

http://www.youtube.com/watch?v=8oLftqnO8-E

http://www.youtube.com/watch?v=jg1BkoyhiH8

http://www.youtube.com/watch?v=hasE1peFrd4

http://www.youtube.com/watch?v=Npb1c8Hcv_4

4 responses so far

« புதிய இடுகைகள் - பழைய இடுகைகள் »

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.