இவற்றிற்கான களஞ்சியம் 'Government of Tamil Eelam' வகை

Jul 09 2006


கோவில்கள் அரசாங்க சொத்தாக்கப்பட வேண்டும்

என்னைப் பொறுத்த வரையில், எந்த மத கோவில்களும் அரசாங்கத்தின் கீழ் இயங்க வேண்டும்.  ஒரு தனி நபர் கோவிலாகவோ, (அ) ஒரு குழு கோவிலாகவோ இருக்கக் கூடாது.

அரசாங்கம் அர்ச்சகர்களுக்கும், போதகர்களுக்கும் அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும்.  மத ஆலையங்கள் அனைத்தும் அரசாங்க சொத்தாகக்கப்பட வேண்டும்.  ஆலையத்திற்கு கிடைக்கும் பணம் முழுவதும் அரசாங்கத்திற்கே போய்ச்சேர வேண்டும்.  வேணுமென்றால், அந்தக் கோவில் நடத்துனருக்கு (அ) அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு விகிதமோ (அ) பத்து விகிதமோ குடுக்கப்படலாம்.  இதே விகிதம் தான் எல்லாக் கோவில்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் [மத வித்தியாசம் இன்றி].  அர்ச்சகர் தட்டில் விழும் பணம் அர்ச்சகருக்கே போய்ச்சேரலாம்.

இப்படிச் செய்தால், பணக்கார ஆலையங்களில் வரும் பணம் கொண்டு ஏழை ஆலையங்களையும் சீராக நடத்தலாம்.  ஏழை அர்ச்சகர்களும் வாழ்க்கை செலவுக்கு கஷ்டப் பட வேண்டியதில்லை.  பண வரவின்மையால் கோவில்கள் இழுத்து மூடப்படாமல் தடுக்கப்படும்.  நாட்டுக்கு ஆலையங்களும் உதவியதாகவும் இருக்கும்.

 

_____
CAPital

 

சேர்க்கப்பட்டது I [GMT  2006/07/12 @ 18:51]

இதனால், நாட்டின் பண நிலமைக்கு சமயங்களும் உதவியதாக இருக்கும்.  இப்போது சமய மந்திரி என்று ஒருவரை அமர்த்தி சமய மேம்பாட்டிற்கென்று பெருந் தொகைப் பணம் அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகிறது.  மக்கள் வரிப்பணத்திலிருந்து சமய மேம்பாட்டிற்கு என்று பணம் ஒதுக்காமல், அந்தந்த சமய தலங்களினூடாக வரும் பணம் அந்தந்த சமய மேம்பாட்டிற்கு என்று உதவலாம்.  ஆகவே, ஒரு மதத்தைச் சார்ந்தோரின் வரிப் பணத்தில் மற்றய மத மேம்பாட்டிற்கு உதவுவதென்பது இருக்காது.

2 responses so far

« புதிய இடுகைகள்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.