இவற்றிற்கான களஞ்சியம் 'திரும‌ண‌ம்' வகை

Aug 06 2008


திரும‌ண‌ம், என‌க்கு

வ‌ண‌க்க‌ம் ந‌ண்ப‌ர்க‌ளே,

நான் விரைவில் திரும‌ண‌ம் செய்து கொள்ள‌ப்போகிறேன். வ‌ருங்கால‌ ம‌னைவி தொலைபேசியில் க‌தைத்துக்கொண்டிருக்கும் போது தான் இந்த‌ப் ப‌திவையே எழுதுகிறேன். அவ‌ சொல்கிறார், திரும‌ண‌ம் ஆவ‌தால் இனிமேல் வ‌லைப்ப‌திவு ப‌க்க‌ம் வ‌ருவ‌து குறைந்து விடும் என்று; அனும‌தித்தால் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் எட்டிப் பார்ப்பேன் என்று.

வ‌ருகிற‌ August 23, 2008 அன்று காலை 10:30 ம‌ணியிலிருந்து ம‌திய‌ம் 12:30 ம‌ணிக்கிடையில் உள்ள‌ சுப‌ முகூர்த்த‌த்தில் க‌ன‌டாவில் என‌து திரும‌ண‌ம் ந‌டைபெறும்.

காத‌ல் திரும‌ண‌ம் அல்ல‌. பெற்றோரால் நிச்ச‌யிற்க‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌மே. என‌க்கு மிக‌வும் பிடித்திருக்கிற‌து. நான் காதலித்துத் திரும‌ண‌ம் ந‌ட‌ந்திருந்தால் கூட‌ இப்ப‌டி ஒரு அருமையான‌ பெண்ணை க‌ண்டுபிடித்திருக்க‌ இய‌லாது. ஆனால், இப்போது காத‌லிக்கிறேன்; அவ‌ளை. வ‌ருங்கால‌ ம‌னைவி த‌மிழீழ‌த்தைச் சேர்ந்த‌வ‌வே.

திரும‌ண‌ம் முடிந்த‌ அடுத்த‌ கிழ‌மையே த‌மிழ் நாடு செல்ல‌ப் போகிறோம். அட‌ honey moon இற்கு இல்லைங்க‌. அங்க‌ இருக்கிற‌ பெரிய‌வ‌ங்க‌ளை/ சொந்த‌க் கார‌ங்க‌ளைப் பார்த்து ஆசீர்வாத‌ம் பெற‌. இது தான் என‌து முத‌ல் த‌மிழ் நாடுப் ப‌ய‌ண‌ம். எப்ப‌டி என‌து திரும‌ண‌ம், எப்ப‌டி த‌மிழ் நாடுப் ப‌ய‌ண‌ம் என்று ம‌ற‌க்காம‌ல் எழுத‌ முய‌ற்சிக்கிறேன். என‌து அம்மா இப்போ கிட்ட‌டியில் தான் த‌மிழ் நாடு சென்று திரும்பின‌வ‌ர். அவ‌விற்கு கோயில்க‌ள் த‌ரிச‌ன‌ம் மிக‌வும் பிடித்திருந்த‌து. அவ‌ சொன்ன‌ மிக‌ப் பெரிய‌ குற்ற‌ச்சாட்டு, த‌மிழ் நாடு சுத்த‌மில்லை என்று. இதை விட‌ இல‌ங்கை சுத்த‌ம் அதிக‌ம் என்றார்.

இந்திய‌ visa கேட்டு விண்ண‌ப்பி‌த்திருந்தேன். Double entry visa கேட்டு ப‌ண‌ம் க‌ட்டியிருந்தேன். அவ‌ர்க‌ள் single entry visa தான் கொடுத்திருக்கிறார்க‌ள். சென்று வ‌ந்து திரும‌ண‌ம் ம‌ற்றும் த‌மிழ் நாடுப் ப‌ய‌ண‌ம் எப்ப‌டி என்று எழுதுகிறேன்.

11 responses so far

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.