Feb
09
2009
CAPitalZ
இந்த ராஜீவ் காந்தியின் கொலையை வைத்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டே இருக்குதப்பா இந்த “இந்தி”யா.
உண்மையில் காங்கிரசிற்கும், அதன் கூட்டணி அமைப்பிற்கும், மற்றும் பினாமிகளுக்கும், ராஜீவ் காந்தியின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றால், இந்த விசாரணையை ஸ்கொட்லாண்ட் யார்ட் இடமோ, அல்லது வேறு ஒரு உலக விசாரணை நடத்தக்கூடிய ஒரு அமைப்பிடமோ கொடுத்து விசாரணை செய்யச் சொல்லுங்கள்.
தமிழக காங்கிரஸ் தலைமையோ, கூட்டணி தலைமையோ [ஜெயலலிதா], அன்று ராஜீவுடன் இல்லை. ஏன் என்ற சந்தேகத்தை மூடி மறைத்து, சும்மா புலி கொண்டுட்டு புலி கொண்டுட்டு என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா எப்போதுமே தமிழர்களின் பக்கம் இல்லை. எங்கே இதை வேறு யாரும் விசாரணை நடத்தினால், உள் குட்டு உடைந்து விடும் என்ற பயத்தில் ராஜீவ் காந்தியை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
எல்லோரும் சொல்வது/ நினைப்பது போல் உண்மையில் புலிகள் தான் செய்திருந்தார்கள் என்று ஆணித்தரமாக எண்ணினால், கொடுத்துப் பார்க்கட்டுமேன் இப்படியான ஒரு உலக விசாரணை நடத்தும் அமைப்பிடம். ஏன் மறுக்குறார்கள்?
Feb
07
2009
CAPitalZ
என்ன தலைப்பைப் பார்த்தவுடன் கோபம் வருகிறதா?
அட பின்ன என்னங்க?
தமிழ் நாட்டில உள்ள கொஞ்ச நெஞ்ச தமிழ்ப் பற்றாளர்களும் தீக்குளிச்சு/ தற்கொலை செய்துகொண்டால் தமிழ் மக்களை யாரப்பா காப்பாற்றுறது?
என்னைப் பொறுத்த வரையில், தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு உண்மையான தமிழ்ப் பற்றுள்ள தலைவர் இல்லை [அட கருணாநிதி சுத்தமா இல்லைங்க]. சரி தலைவர் இல்லை என்றால் அட நீங்களே ஒரு புதிய தலைவராக உருவாகுங்கள். எப்பவுமே யார் சொல்லையாச்சும் கேட்டு கேட்டு அடிமை போல் சொன்னதைச் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் ஏறி மக்களை வழிநடத்துவது கடினமாகத் தான் இருக்கும். இருந்தாலும் யாராச்சும் உருவாக வேண்டுமெல்லோ?
ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப் பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண் டிருந்தது.
மாறாக, கருணாதி தன் சுயரூபத்தை, இவ்வளவு காலமும் பொத்தி வைத்த ரகசியத்தை வெளியில் விட்டிருக்கிறார். தனக்கு புலிகள் அந்தக் காலத்தில் சகோதர யுத்ததை நடத்தியபோதே புலிகளை வெறுத்து விட்டதாம். தலைவர் வே. பிரபாகரன், ஒரு சர்வாதிகாரி ஆம்.
இவ்வளவு நாளும் புலிகளை பகைக்க விரும்பாமல் ஏதோ தானோ என்று இருந்திருக்கிறார் போலும். இப்போது புலிகள் “ஒழிக்கப்படுகிறார்கள்” என்றவுடன் உண்மையான தன் மனநிலையை வெளியில் விடுகிறார் போலும். இதற்கு ஜெயலலிதா எவ்வளோ மேல். அவர் கண்ணுக்குத் தெரிந்த எதிரி. ஆனால், கூடவே இருக்கும் நரிகளை அடையாளங் காணுவது கடினம் தான்.
இப்படியான ஒரு படு மோசமான நெருக்கடியை தமிழீழ மக்கள் எதிர்கொண்டிருக்கும் வேளையில், உண்மையாக யார் தமிழீழ மக்கள் பக்கம், யார் தமிழீழ மக்களுக்கு எதிரானவர்கள் என்பது தெரிய வருகிறது.
தமிழீழப் பற்றாளர்களே, இந்தக் கால கட்டத்தை உண்ணிப்பாகக் கவனியுங்கள். புலித்தோல் போற்றிய நரியும், பசுத்தோல் போற்றிய நரியும்ம் தம்மைத் தாமே அடையாளங் காட்டிக்கொள்கின்றன.
உற்று நோக்குங்கள்.
பா – 2