Nov 22 2008

[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 3] த‌மிழ்த் தாய் நாட்டில் என் முத‌ல் பாத‌ம்

Posted at 9:16 am under India,Tamil Nadu

எத‌ற்கும் த‌யாராக‌ த‌மிழ் நாட்டிற்கு கிள‌ம்பிவிட்டேன்.

சென்னை விமான‌ நில‌ய‌த்தில் இறங்கிய‌து ந‌ம‌து Jet Airways. விமான‌த்திற்கு வெளியில் வ‌ந்து அந்த‌ ந‌டை ஓடையினுள் ந‌ட‌க்கும் போதே சாடையான‌ வெட்கை தொட‌த் தொட‌ங்கிய‌து. அம்மாவிற்கு wheelchair book ப‌ண்ணி இருந்த‌னாங்க‌ள். விமான‌த்தின் க‌த‌விற்கு வெளியே நின்றிருந்தார்க‌ள். wheelchair ஐப் பார்த்தாலே ப‌ய‌மாக‌ இருந்த‌து. அட‌ அம்மா அதிலிருந்து த‌வ‌றி விழுந்து விடுவாரோ என்று தான். கை வைப்ப‌த‌ற்கு இரு ம‌ருங்கிலும் ஒரு த‌டைக‌ளும் கிடையாது. ஒரு ப‌க்க‌ம் ச‌ரிஞ்சால், அப்ப‌டியே வ‌ழுக்கி விழ‌ வேண்டிய‌து தான்.

ஏதோ ஏறிக்கொண்டு போனோம். wheel chair இற்கு என்று த‌னியான‌ custom counter. எந்த‌ பிர‌ச்சினையும் இல்லாம‌ல், மிக‌ குறுகிய‌ நேர‌த்திலேயே bag எடுக்கும் இட‌த்திற்கு வ‌ந்து விட்டோம். ஏதோ போற‌ணைக்குள் இருப்ப‌து போல் ஒரு சாடையான‌ உண‌ர்வு. என‌து ம‌னைவிக்கு விய‌ர்க்க‌த் தொட‌ங்கி விட்ட‌து. என‌க்கு இன்ன‌மும் விய‌ர்க்க‌வில்லை. என் உட‌ம்பு வெட்கையை, குளிரை விட‌ விரும்புவது, என்ப‌தாலோ என‌க்கு விய‌ர்க்க‌வில்லை.

ஆனால், என‌க்குள் ஏதோ ஒரு விப‌ரிக்க‌ முடியாத‌ ச‌ந்தோச‌ம். என் நாட்டில் வ‌ந்து இற‌ங்கிய‌து போல் இருந்த‌து. த‌மிழில் பெய‌ர்ப்ப‌ல‌கைக‌ள் க‌ண்டேன். வேலை செய்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் த‌மிழ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். ஆனால் எல்லோரும் இளைஞ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். நினைத்துக் கொண்டேன், வேலை எடுக்க‌க் க‌டின‌ம் என்ப‌தால் கிடைத்த‌ வேலையை செய்கிறார்க‌ள் என்று.

விமான‌த்தில் இருக்கும் போதே எல்லோரும் க‌ழிவ‌றைக்குப் போனார்க‌ள். நான் இற‌ங்கிப் போக‌லாம் என்று இருந்தேன். அப்போது ம‌னைவி சொன்னார், விமான‌ நில‌ய‌ க‌ழிவ‌றை செல்லும்ப‌டியாக‌ இருக்காது என்று. அப்ப‌வே ஒரு ஆசை. அந்த‌க் க‌ழிவ‌றைக்கு நான் போயே தீர‌வேண்டும். ஏன்? அட‌ அப்ப‌ தானே என‌து ப‌திவில் அதைப் ப‌ற்றியும் எழுத‌லாம். இற‌ங்கி அத‌ற்குள் போனேன். அட‌டா தாங்க‌ முடிய‌லைங்க‌. அவ்வ‌ள‌வு நாற்ற‌ம். நில‌ம் முழுக்க‌ ஈர‌மாக‌ [எப்ப‌டி என்று கேட்காதீர்க‌ள்?!] இருந்த‌து. அட‌ நாட்டின் முத‌ல் தொட‌ர்பு இட‌மாக‌, வ‌ர‌வேற்பு இட‌மாக‌ உள்ள‌ விமான‌ நிலைய‌த்திலேயே இப்ப‌டி க‌வ‌னிக்காம‌ல் இருந்தால் எப்ப‌டி சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ருவார்க‌ள் என்று யோசித்துக்கொண்டேன். ஆனால் ஒன்று ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. பிற‌கு க‌ன‌டா திரும்பும் போது விமான‌ நிலைய‌த்தில் க‌ழிவ‌றைக்குப் போனேன். அது கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லையாக‌ இருந்த‌து. போகும்போது ந‌ல்லா க‌வ‌னிக்கிறார்க‌ளோ?

எல்லாம் முடிந்து, விமான‌ நில‌ய‌த்திற்கு வெளியே வ‌ந்தேன். இன்னும் கூட‌ வெட்கையாக‌ இருந்த‌து. அப்போது தான் என‌க்கு இடித்த‌து. நாங்க‌ள் வெளியில் வ‌ந்த‌து அங்க‌த்தே நேர‌ப்ப‌டி அதி காலை 1:30. அட‌ அந்த‌ நேர‌த்திலேயே இப்ப‌டி வெட்கை என்றால், ம‌த்தியான‌த்தில் என்ன‌ நில‌மை என்று யோசித்தேன், ச‌ற்றுப் ப‌ய‌மாக‌ இருந்த‌து. ஆ, ஒருகை பார்த்து விடுவோமே.

வெளியில் ஒரே ச‌ன‌க்கூட்ட‌மாக‌வே இருந்த‌து. இந்த‌ ந‌டு ராத்திரியில் கூட‌ ரீ/ க‌ட‌லை என்று எல்லாம் கையில் கொண்டு விற்றுக்கொண்டிருந்தார்க‌ள். ஆட்க‌ள் சும்மா த‌ரையில் இருந்தும் ப‌டுத்தும், இருந்தார்க‌ள். க‌ன‌டாவில் என்றால், அசிங்க‌ம் என்று எண்ண‌த் தோன்றியிருக்கும். ஆனால், என‌க்கு ஏதோ ஒரு “ந‌ம்ம‌ இன‌ம்” “ந‌ம்ம‌ ச‌ன‌ம்” நம்ம மண் என்று ஆன‌ந்த‌மாக‌வே தோன்றிய‌து.

நான் இந்திய அர‌சை எவ்வ‌ள‌வு வெறுத்தேனோ, அதை விட‌ என் ஆன‌ந்த‌ம் அதிக‌ மாக‌ இருந்த‌து. பிற‌கு சின்ன‌ நெருட‌ல். அட‌டே, இப்ப‌டி என் ச‌ன‌மும் இருக்கும் நாள் எப்போது.

இந்தியாவில் இருந்த‌ என‌து ம‌னைவியின் அப்ப‌ப்பாவும், அப்ப‌ம்மாவும் வாக‌ன‌ம் பிடித்து வ‌ந்திருந்தார்க‌ள். அதில் ஏறினோம். இர‌ண்டு வேலை ஆட்க‌ள் கொண்டு bag குக‌ளை வாக‌ன‌த்தின் பின்னும், மேலும் க‌ட்டினோம். அவ்வ‌ள‌விற்கு சாமான், 6 பேர் அல்ல‌வா. என‌து தாயார், நான், ம‌னைவி, ம‌னைவியின் த‌ம்பி, த‌ந்தை, தாய் என்று எல்லோரும் க‌ன‌டாவில் இருந்து வ‌ந்து சேர்ந்தோம்.

வ‌ண்டியில் போகும்போதே இடையில் ஒரு இட‌த்தில் ச‌ல‌ம் போவ‌த‌ற்காக‌ நிற்பாட்டினார்க‌ள். இது தான் என் தமிழ் நாட்டுப் பயணத்தில் ம‌ற‌க்க‌ முடியாத‌ ச‌ம்ப‌வ‌ம். ந‌ல்ல‌ இர‌வு,  மூன்று பக்கம் துறந்த ஒரு தட்டி போட்ட க‌டை.   த‌ட்டி போட்டு அடுப்பு வைத்து சுட்டுக்கொண்டிருந்தார்க‌ள். ஈ, கொசு எல்லாம் த‌ங்க‌ள் ராய்ச்சிய‌ம். மேசை எல்லாம் clean என்ற‌ வார்த்தை அறியாத‌வைக‌ளாக‌ இருந்த‌ன‌. ஆனாலும் என‌க்குள் இங்கு உண்ண‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம். ப‌சித்த‌து என்ப‌து தான் உண்மை. ப‌ரோட்டா ரொட்டியும் சாம்பார், ப‌ருப்பு, வேறு ஏதோ ச‌ம்ப‌ல் என்று சாப்பிட்டோம். அட‌ நானும் என‌து ம‌ச்சானும் ம‌ட்டுமே உண்டோம். ஒரு ரொட்டி காணாது என்று இன்னுமொரு பரோட்டா கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன்.  இப்படி ஒரு பராட்டோ ரொட்டியை பிறகு நான் எங்கும் உண்ண‌வில்லை.  எல்லோருமாக Tea குடித்தோம். அதையும் சொல்ல‌ வேண்டும். Tea cup இங்கு க‌ன‌டாவில் போல் பெரிய‌ அள‌வு இல்லை. இங்க‌த்தே அள‌வின் 1/3 ப‌ங்காக‌வே இருக்கும். அவ்வ‌ள‌விற்கு மிக‌ச் சிறிய‌ அள‌வில் தான் அங்கு எந்த‌க் க‌டையிலும் Tea த‌ருவார்க‌ள்.ஆனால் என்னமோ, ருசியாகத்தான் இருக்கும்.  அட சலம் கழிக்க அல்லவா நிற்பாட்டினோம்.  அதையும் கடைக்கு அருகாமையில் ஒருஓரமாக,காற்றோட்டமாக கழித்தோம்.  அந்த நாள் ஞாபகம நெஞ்சிலே வந்ததே என்று பாடவேண்டும் போல் இருந்தது.

தமிழ் நாடு எப்படி என்று அடுத்த இடுகையில் பார்போமா.

4 responses so far
4 பதில்கள் to “[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 3] த‌மிழ்த் தாய் நாட்டில் என் முத‌ல் பாத‌ம்”

 1. […] அடுத்த‌ இடுகையில் த‌மிழ் நாட்டில் த‌… […]

 2.   Nagendranon 22 Nov 2008 at 9:44 am 2

  //நான் இந்திய அர‌சை எவ்வ‌ள‌வு வெறுத்தேனோ, அதை விட‌ என் ஆன‌ந்த‌ம் அதிக‌ மாக‌ இருந்த‌து. பிற‌கு சின்ன‌ நெருட‌ல். அட‌டே, இப்ப‌டி என் ச‌ன‌மும் இருக்கும் நாள் எப்போது.//

  thanks buddy. yes i accept my country is lagging on sanity and other places. but the freedom and support given by indian government to most of the citizens is incredible.

  may be our indian government is doing false game with out countries but the same time it tries to take care of big 100 billion population

  //ஆனால் எல்லோரும் இளைஞ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். நினைத்துக் கொண்டேன், வேலை எடுக்க‌க் க‌டின‌ம் என்ப‌தால் கிடைத்த‌ வேலையை செய்கிறார்க‌ள் என்று.//

  no, airline industry is booming and heavily paid industry in india. so young generation wants to work in Aviation industry

 3.   capitalzon 22 Nov 2008 at 10:21 am 3

  ந‌ன்றி நாகேந்திர‌ன் அவ‌ர்க‌ளே உங்க‌ள் வ‌ருகைக்கும், க‌ருத்திற்கும்.

  நான் இளைஞ‌ர்க‌ள் வேலை செய்கிறார்க‌ள் என்று சொன்ன‌து, porter & cleaner வேலைக‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ளை. அத‌ற்கும் அதிக‌ ச‌ம்ப‌ள‌மாக‌ இருக்க‌லாம்.

  நான் என் ம‌ன‌தில் அந்த‌ நொடியில் தோன்றிய‌தை அப்ப‌டியே எழுதி இருக்கிறேன்.

 4. […] கேர‌ளாவும் 4 வித்தியாச‌ங்க‌ள் த‌மிழ் ந‌ட்டில் த‌ரையிற‌ங்கி வெட்ப‌ …. இனி என்ன‌ க‌ண்டேன் என்று […]

Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.