Aug 06 2008

திரும‌ண‌ம், என‌க்கு

Posted at 10:41 pm under திரும‌ண‌ம்

வ‌ண‌க்க‌ம் ந‌ண்ப‌ர்க‌ளே,

நான் விரைவில் திரும‌ண‌ம் செய்து கொள்ள‌ப்போகிறேன். வ‌ருங்கால‌ ம‌னைவி தொலைபேசியில் க‌தைத்துக்கொண்டிருக்கும் போது தான் இந்த‌ப் ப‌திவையே எழுதுகிறேன். அவ‌ சொல்கிறார், திரும‌ண‌ம் ஆவ‌தால் இனிமேல் வ‌லைப்ப‌திவு ப‌க்க‌ம் வ‌ருவ‌து குறைந்து விடும் என்று; அனும‌தித்தால் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் எட்டிப் பார்ப்பேன் என்று.

வ‌ருகிற‌ August 23, 2008 அன்று காலை 10:30 ம‌ணியிலிருந்து ம‌திய‌ம் 12:30 ம‌ணிக்கிடையில் உள்ள‌ சுப‌ முகூர்த்த‌த்தில் க‌ன‌டாவில் என‌து திரும‌ண‌ம் ந‌டைபெறும்.

காத‌ல் திரும‌ண‌ம் அல்ல‌. பெற்றோரால் நிச்ச‌யிற்க‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌மே. என‌க்கு மிக‌வும் பிடித்திருக்கிற‌து. நான் காதலித்துத் திரும‌ண‌ம் ந‌ட‌ந்திருந்தால் கூட‌ இப்ப‌டி ஒரு அருமையான‌ பெண்ணை க‌ண்டுபிடித்திருக்க‌ இய‌லாது. ஆனால், இப்போது காத‌லிக்கிறேன்; அவ‌ளை. வ‌ருங்கால‌ ம‌னைவி த‌மிழீழ‌த்தைச் சேர்ந்த‌வ‌வே.

திரும‌ண‌ம் முடிந்த‌ அடுத்த‌ கிழ‌மையே த‌மிழ் நாடு செல்ல‌ப் போகிறோம். அட‌ honey moon இற்கு இல்லைங்க‌. அங்க‌ இருக்கிற‌ பெரிய‌வ‌ங்க‌ளை/ சொந்த‌க் கார‌ங்க‌ளைப் பார்த்து ஆசீர்வாத‌ம் பெற‌. இது தான் என‌து முத‌ல் த‌மிழ் நாடுப் ப‌ய‌ண‌ம். எப்ப‌டி என‌து திரும‌ண‌ம், எப்ப‌டி த‌மிழ் நாடுப் ப‌ய‌ண‌ம் என்று ம‌ற‌க்காம‌ல் எழுத‌ முய‌ற்சிக்கிறேன். என‌து அம்மா இப்போ கிட்ட‌டியில் தான் த‌மிழ் நாடு சென்று திரும்பின‌வ‌ர். அவ‌விற்கு கோயில்க‌ள் த‌ரிச‌ன‌ம் மிக‌வும் பிடித்திருந்த‌து. அவ‌ சொன்ன‌ மிக‌ப் பெரிய‌ குற்ற‌ச்சாட்டு, த‌மிழ் நாடு சுத்த‌மில்லை என்று. இதை விட‌ இல‌ங்கை சுத்த‌ம் அதிக‌ம் என்றார்.

இந்திய‌ visa கேட்டு விண்ண‌ப்பி‌த்திருந்தேன். Double entry visa கேட்டு ப‌ண‌ம் க‌ட்டியிருந்தேன். அவ‌ர்க‌ள் single entry visa தான் கொடுத்திருக்கிறார்க‌ள். சென்று வ‌ந்து திரும‌ண‌ம் ம‌ற்றும் த‌மிழ் நாடுப் ப‌ய‌ண‌ம் எப்ப‌டி என்று எழுதுகிறேன்.

11 responses so far
11 பதில்கள் to “திரும‌ண‌ம், என‌க்கு”

 1.   விழியன்on 06 Aug 2008 at 11:07 pm 1

  வாழ்த்துகள்

 2.   யாத்திரீகன்on 07 Aug 2008 at 1:00 am 2

  வாழ்த்துக்க‌ள்…

 3.   சந்திரவதனாon 07 Aug 2008 at 2:15 am 3

  சந்தோசமான செய்தி.
  இனிய வாழ்த்துக்கள்.

 4.   ஜோசப் பால்ராஜ்on 07 Aug 2008 at 11:16 am 4

  மனம் கனிந்த வாழ்த்துக்கள். உங்கள் திருமண வாழ்வும், தமிழ்நாட்டுப் பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

 5.   தேவ‌ன்on 07 Aug 2008 at 4:45 pm 5

  வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே இனிய‌ இல்ல‌ற‌ப் புதுவாழ்கைக்கு

 6.   தமிழ் சசிon 08 Aug 2008 at 6:05 pm 6

  வாழ்த்துக்கள்

 7.   வெற்றிon 08 Aug 2008 at 11:58 pm 7

  கலியாண மற்றும முதல் தமிழகப் பயணத்துக்கும் வாழ்த்துக்கள்.

 8.   அன்ப‌னon 09 Aug 2008 at 2:17 am 8

  சந்தோசமான செய்தி.
  இனிய வாழ்த்துக்கள்.

  மனம் கனிந்த வாழ்த்துக்கள். உங்கள் திருமண வாழ்வும், தமிழ்நாட்டுப் பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

 9.   capitalzon 09 Aug 2008 at 8:57 am 9

  நெஞ்சார‌ வாழ்த்தி ம‌ட‌ல் அனுப்பிய‌ உள்ள‌ங்க‌ளுக்கும், வாசித்து ம‌ன‌திற்குள் வாழ்த்திய‌ நெஞ்ச‌ங்க‌ளுக்கும் என் இத‌ய‌ங்க‌னிந்த‌ ந‌ன்றிக‌ள்.

  என‌க்கு திரும‌ண‌ வாழ்க்கை எப்ப‌டி இருக்க‌ப்போகிற‌து என்ற‌ ப‌ய‌த்தை விட‌ [எல்லாரும் ப‌ய‌ப்பிடுத்திறாங்க‌, ஆனா நான் உற்சாகமாக‌ எதிர்பார்ப்போடு தான் இருக்கிறேன்]. திரும‌ண‌ம் அன்று ந‌ட‌ப்ப‌வை ப‌ற்றியே சிந்த‌னையாக‌ இருக்கிற‌து. மீசை எப்ப‌டி விட‌ வேண்டும்/ த‌லைம‌யிர் எப்ப‌டி வெட்ட‌ வேண்டும்/ ஒவ்வொரு நிக‌ழ்ச்சியும் பிந்தாம‌ல் ந‌டைபெற‌ வேண்டும்/ ஒவ்வொரு நிக‌ழ்ச்சி செய்வ‌த‌ற்கும் யார் யார் நேர‌த்திற்கு தொட‌ங்க‌ வேண்டும்/ விருந்தின‌ர் குறை சொல்ல‌க் கூடாது என்றெல்லாம் ப‌ல‌ சிந்த‌னையாக‌ இருக்கிற‌து.

 10.   Mrs. CAPital Zon 06 May 2009 at 12:17 pm 10

  Dear Mr. CAPital Z

  May I know the reason why this post of yours is under the “uncategorized” heading?

  hehehehehehe…..

  mmmmmmmmmmmmm Just wondering……

  could have emailed you….but…..mmmmm want to do something new and unique…just the way you love it….

  hehehehehe

 11.   capitalzon 06 May 2009 at 12:40 pm 11

  I have replaced the uncategorized category with திரும‌ண‌ம் category.

  Thank you Mrs CAPitalZ

Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.