May 21 2007
இந்தியாவின் நாடகம் அம்பலம்!
இந்திய மீனவர்கள் கடத்தப்பட்டது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் அதைப்பற்றி விபரிக்காமல் கீழே உள்ள ஒளிப்பதிவைப் பாருங்கள்:
இப்போது இதை வாசித்து விட்டு மீண்டும் ஒருமுறை பாருங்கள்:
- சிறுவன் கதைக்கும் போது அருகாமையில் உள்ளவர் என்ன செய்கிறார்?
- சிறுவன் “சிறிலங்கா நேவி” என்று சொன்னதும் அவர் முகத்தில் தோன்றும் மாற்றங்கள்.
- அவர் சிறுவனைக்கு அது விடுதலைப்புலிகள் என்று சொல்லச் சொல்கிறார். ஒலிவடிவில் “அது விடு” என்று கேட்டவுடன் துண்டிக்கப்படுகிறது.
நேற்று “விசு win மக்கள் அரங்கம்” பார்த்தேன். அதில் அவர் இரு சிறுமிகள் தங்கள் கிராமமான “மன்னார் குடி” இல் இருக்கும் முக்கிய பிரச்சினைகளை சொல்கிறார்கள். விசு கேட்கிறார், ஏம்மா இவ்வளவு பெரிய விசயத்தைச் சொல்ல உங்க ஊரில் பெரியவங்க ஒருத்தரும் இல்லையா என்று. அதற்கு அந்தச் சிறுமிகள் கூறுவார்கள் “பெரியவங்களுக்கு feelings. அவங்களுக்கு பயம். எனக்கு பயமில்லை”.
சில சந்தேகங்கள்:
- மீன்வர்கள் தமிழகக் கரை வந்தடைந்ததும் எந்த ஊடகவியளாளர்களுடனும் கதைக்க அனுமதிக்கப்படவில்லை.
- மொத்தமாக 11 பேர் மீண்டு வந்தாலும் ஒருவர் மட்டும் முன்பு காவல்துறையின் அனுமதியுடன் பேட்டி கொடுத்தார் [?!].
- மீண்டு வந்தவர்களுக்கு ஆளுக்கு ரூ.10,000 வளங்கப்பட்டது. [பொய் சொல்வதற்காகவா?]
எனக்கு இதில் புதிதாக ஒரு விடயம் தெரிகிறது. இந்தச் சிறுவன் கதைக்கும் தமிழைக் கவனியுங்கள். இதே தமிழ் வழக்கைத் தான் யாழ்ப்பாணத் தமிழ் என்று தமிழ்த் திரைப்படங்களில் பேசுவார்கள். எல்லா யாழ்ப்பாணத்துக்காரர்களும் இப்படி நாங்கள் தமிழ் கதைப்பது இல்லை என்று எரிந்து விழுவார்கள்.
3 responses so far
சிருவனின் தமில் ஜல்பன தம்பஇல் அல்ல அது இந்த்ய தமில்.
அடடா… அதைத் தான் நானும் சொன்னேன்.
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் பெயரிலியே.
சிறுவன் பேசும் தமிழை நானும் கவனித்தேன்.
அது ஈழத்தவரது தமிழை ஒத்திருக்கிறது. ஆனால் முழுமையாக அல்ல.
குறிப்பாக அது யாழ்ப்பாணத்தமிழ் அல்ல, கிழக்கிலங்கைத் தமிழை ஒத்திருக்கிறது.
ஆனாலும் சிறுவன் தனது வட்டார தென்னிந்தியத்தமிழையே பேசுகிறான்.