Feb 16 2007

CAPitalZ

“ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?

ஒரு மரவெட்டி கிளையில் இருந்துகொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.

உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் போகிறேன் என்றாராம்.

இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லோ கூப்பிட்டான். அதனால், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

இப்படித் தான் “ஐயோ” என்று சொல்லக்கூடாது என்பதற்காக எனக்கு அம்மா சொன்ன கதை.

______
CAPitalZ

3 responses so far




3 பதில்கள் to ““ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?”

  1.   நான் மட்டும் பெயர் சொல்லனுமா ?... :-))on 16 Jun 2007 at 9:29 am 1

    அருமையான விளக்கம் நண்பரே…. :) )

  2.   சேகர். சிon 06 Jul 2007 at 9:41 am 2

    மிகவும் நல்ல கருத்து. நன்றி நண்பரே.,

  3.   சாஜுon 15 Jul 2010 at 11:26 am 3

    அருமையான‌ க‌ருத்தை சொன்னீர் ந‌ன்ப‌ரே.

Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்