Feb 13 2007

தமிழில் நீங்கள் பேச கணினி தட்டச்சுவது சாத்தியமே!

Posted at 10:06 am under Computer,Tamil Nadu,Thamizh

இந்த இடுகையானது மயூரன் அவர்களின் சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா? என்னும் இடுகைக்கான எனது பதில் இடுகை.

நீங்கள் சொல்வதை ஓரளவிற்கு ஏற்றாலும், சொல்திருத்தியால் பல நன்மைகளும் கொண்டுவரலாம்.

“வாலைப்பலம்” என்பதை சொல்திரித்தியால் பிழை கண்டுகொள்ளலாம்.
இந்த சொல்லுக்குப் பின்னால் ஈழத்தமிழன் கலவரவும் இருக்குதையா…! இதை ஒருவரிடன் சொல்லச் சொன்னால், அவன் சரியாகச் சொல்லவில்லை என்றால் [சரியானது: “வாழைப்பழம்”, எழுத்து அல்ல உச்சரிப்பே கவனிக்கப்பட்டது] , அவன் சிங்களவன் என்று இனங்கண்டு கொண்டார்கள். இப்படி சிங்களவனும் சில சொற்கள் வைத்திருந்தான். சொல்லவில்லை என்றால் வெட்டு/ எரி.

சரி, இப்படிப் பல சொற்களைக் திருத்திக்கொள்ளலாம் தானே?

இதைவிட தமிழ் இலக்கண விதிகளை தொல்காப்பியமும் அதற்குப் பின் வந்த நன்னூல் போன்ற பிற இலக்கண நூல்களும் வரையறுக்கின்றன. அந்த விதிகளைக் கொண்டும் பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். உ+ம்: மெய்யெழுத்தில் எந்தச் சொல்லும் தொடங்காது. இப்படிப் பல இருக்கு. “அன்த” என்று எழுதாமல் “அந்த‌” திருத்தவும் உதவும். மெய்யெழுத்தின் பின் ஒரு உயிர் எழுத்து வராது: “அக்க்அரை” என்று எழுதாமல் “அக்கரை” என்று காட்டும்.

ஆங்கிலத்தில் இப்படி எல்லாம் விதிகள் இல்லை. ஆங்கில இலக்கண விதிகளுக்கே பல விதிவிலக்குகள் இருக்கின்றன. பிரஞ்சுக்கு இதைவிட அதிகம். தமிழ் மிகவும் கட்டுக்கோப்பான மொழி. அங்கில மென்பொருள் ஒன்று உள்ளது. நீங்கள் ஒலிவாங்கியில் சாதாரணமாகக் கதைப்பது போல் கதைக்க கணினியில் உங்கள் வசனங்களை அது தானாகவே கண்டுபிடித்து தட்டச்சும். இப்பட்டிப்பட்ட மேம்பட்ட செயற்பாடு ஆங்கிலம் போன்ற மொழிக்கே இருக்கிறதென்றால், தமிழுக்கு நிச்சயமாகச் செய்யலாம். இந்த அங்கில மென்பொருள் எந்தக் காலமோ வந்தாலும் அது பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை. காரணம் எல்லா நேரமும் சரியாக நீங்கள் சொல்வது வராது. இதற்கு ஆங்கில மொழியின் இலக்கண விதிகளே காரணம். தமிழுக்குச் செய்தால், மிகத் துல்லியமாகச் செய்யலாம். ஏனெனில், தமிழில் ஒரு சொல்லை ஒரு விதமாகத் தான் உச்சரிக்கலாம். ஆங்கிலத்தில் அப்படி அல்ல. உ+ம்: லைவ் = live = நேரடி ஒலிபரப்பு, லிவ் = live = வாழ்; இப்போ இதைச் சொல்லிப்பாருங்கள்: live your life!

இங்கே இந்த ஒளிநாடாவைப் பாருங்கள். வேடிக்கை புரியும். இது மைக்றோசொவ்டின் புதிய இயங்குதளமான விஸ்டா அறிமுகப்படுத்தியபோது அரங்கில் நடந்தது.
[kml_flashembed movie="http://www.youtube.com/v/kX8oYoYy2Gc" width="425" height="350" wmode="transparent" /]
அவர் ஏதோ சொல்ல கணினி தன்னிச்சையாக வேறு ஏதொ அடிக்கிறது.

அப்ப ஏன் இன்னும் தமிழுக்கு இப்படிச் செய்யவில்லை?
இதை ஆராய்ச்சி செய்து உருவாக்குவதற்கு பண உதவி வேண்டும். அது தமிழ் அரசிடமிருந்து கிடைப்பதில்லை. இப்போது நடக்கும் ஆராய்ச்சிகள் கூட [முரசு, INFITT/ உத்தமம்] தனியார்/ ஆர்வலர்கள்/ குழும‌ நிறுவனங்கள் தங்கள் பணத்தை போட்டுத் தான் செய்கின்றன. தமிழ் அரசு ஒருங்குறி ஒன்றியத்தில் அங்கத்தவராகக் கூட இருக்கவில்லை, தமிழை ஒருங்குறியில் ஏற்றும்போது! இவர்களும் முயற்சிக்கிறார்கள் Developing Intelligent Indic Applications.

அப்படிப் பெருந்த்தொகைப் பணத்தைப் போட்டுச் செய்தால் யார் அதை வாங்குவார்கள்?
தமிழுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆங்கிலத்திலத்திலேயே எல்லாம் செய்ய அரசு அனுமதிப்பதால்், ஏன் தமிழுக்கு என்று பணம் செலவு செய்து அதை வாங்க வேண்டும் என்று யோசிக்கிறார்கள். அரசு தமிழை அமுல்படுத்தினால், நிறுவனங்கள் வாங்க முன்வரும். நிறுவனங்கள் வாங்க முன்வந்தால், ஆராய்ச்சியாளர்கள் போட்டிபோட்டு மிகவும் மேம்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட தமிழ்த் திருத்தியை உருவாக்குவார்கள்.

பெருந்தொகைப் பணத்தைப் போட்டுச் செய்துவிட்டு அதை இலவசமாகக் கொடுக்கவும் முடியாது.

தொல்காப்பிய விளக்கங்கள்:
கடுவெளி
tamil-ulagam : Message: tholkaappiyamum kuRiyeeRRangkaLum – 2
tamil-ulagam : Message: tholkaappiyamum kuRiyeeRRangkaLum – 3
tamil-ulagam : Message: tholkaappiumum kuRiyeeRRangkaLum – 4

6 responses so far
6 பதில்கள் to “தமிழில் நீங்கள் பேச கணினி தட்டச்சுவது சாத்தியமே!”

 1.   மு.மயூரன்on 25 Apr 2007 at 11:07 pm 1

  இன்றைக்குத்தான் இந்தப்பதிவைப்பார்த்தேன்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  வாலைப்பலம் என்றால், இளமைக்காலத்துப்பலம். இளமையின் பலம் என அர்த்தம்.

  இதைத்தான் என் பதிவில் சொல்லவந்தேன்.

 2.   சேகர். சிon 06 Jul 2007 at 1:49 pm 2

  நிச்சயமாக இது ஒரு நல்ல விஷயம்.

 3.   விமல்on 08 Aug 2007 at 5:13 pm 3

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நிச்சயமாக இது ஒரு நல்ல விஷயம்

 4.   மயூரேசன்on 31 Aug 2007 at 9:03 am 4

  நல்ல பதிவு…..
  கீழ விழுந்தாலும் அவருக்கு மீசையில மண் முட்டேல பாருங்க… பாவம்… அந்த மைக்ரோசாப்ட் காரர்.

 5.   capitalzon 31 Aug 2007 at 9:25 am 5

  நன்றி மயூரேசன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

  அப்படி இல்லை. அவர் நடந்தது போல் தான் மேடை பேச்சுக்களில் செய்ய வேண்டும். அவர் வீழ்ச்சியையும் ஒரு சுவாரசியமாக முடித்துவிட்டார்.

 6.   சதீஷ்on 14 Sep 2007 at 12:44 am 6

  அருமையான பதிவு.

  நீங்கள் கருத்தை நான் 100 சதம் ஆமோதிக்கிறேன்

Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.