சுயசரிதை
எனது பெற்றோர்கள் மலேசியாவிலே பிறந்தார்கள். நான் தமிழீழத்தில் பிறந்தேன். இந்தியாவிற்கு சென்றது கிடையாது, ஆனால் மலேசியாவிற்கு சென்றுள்ளேன். இப்போது .NET Software Developer ஆக வேலை பார்க்கிறேன். நான் ஒரு தமிழ்ப் பற்றாளன். அதற்காக நான் என்ன செய்திருக்கின்றேன் என்று கேட்காதீர்கள். ஏதும் சொல்வதளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை.
நான் ஒரு கடும் போக்க வதி [hardliner]. இருக்கு அல்லையேல் இல்லை என்று தான் வாதிடுவேனே தவிர, இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று வாதிடுபவன் அல்ல. வாழ்க்கையே ஒரு “choice”. ஒருவன் எடுக்கும் முடிவுகள் தான் அவன் வாழ்க்கை எப்படி அமைவதென்று நிர்ணயிக்கிறது. சகலதையும் சீர்தூக்கிப் பார்த்து ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகவேண்டும். எல்லா முடிவுகளும் சரியானதாக இல்லாத பட்சத்தில், எது ஓரளவு சரியானதோ அதை முற்றுமுழுதாக தேர்ந்தெடுப்பவன் நான். எனது இந்த வலைப்பூக்களில் இருக்கும் சிந்தனைகள் யாவும், ஏதாவது ஒரு பக்கம் முற்றுமுழுதாக சார்ந்தே இருக்கலாம். இதனால், என் வலைபூவிற்கு வருபவர்களின் மனம் புண்படுமானால் அதற்காக நான் மிகவும் வருத்தப் படுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.
எனக்கு என் பெயரை சொல்லி பெருமிதமடைய பிடிக்காது.
ஃகீ ஃகீ… அது ஒரு பகிடிக்காகவே சொன்னேன். கர்வமென தப்பாக எடுக்க வேண்டும்.
வீட்டுப் பெயரை, வெளியில் பாவிக்க மாட்டார்கள். பத்திரிகைகளில் எழுதும்போது சொந்தப் பெயரைப் பாவிக்க மாட்டார்கள். பெண்ணின் பெயரில் எழுதிய/ எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் இருக்குறார்கள். நானும் ஏதாவது இப்படி வைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்ததே CAPital. தலைநகரத்தில் தான் முதலில் இருந்தேன். அங்கே Capital Taxi இருக்கிறது, அதைத் தளுவியே நான் CAPital என்று எனது சிறு மாற்றத்துடன் எழுத ஆரம்பித்தேன். Caps lock என்பது ஆங்கில பெரிய எழுத்தை குறிக்கும் முகமாக கணினியில் இருக்கும். ஆகவே அதை CAP என்று ஆக்கினேன்.
தமிழ் மேல் ஆர்வம் வந்த பின்பும் இந்தப் பெயரை மட்டும் விட விருப்பமில்லாமல் இருக்கிறது. பழகினால் விடுவது கடினம் தானே. இதைப் போல் எனக்குப் பிடித்த மாதிரி தமிழ்ப் பெயர் ஒன்றும் எட்டவில்லை.
______
CAPitalZ